குமாரபாளையத்தில் ஊரடங்கு விதிமீறல்: வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு!

குமாரபாளையத்தில் ஊரடங்கு விதிமீறல்:  வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு!
X

குமாரபாளையம் பைபாஸ் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுவரும் காவலர்கள்,ஊரடங்கு விதிகளை மீறி ஊர் சுற்றிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பதை படத்தில் காணலாம்.

குமாரபாளையம் பைபாஸ் சாலையில் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பைபாஸ் சாலையில், குமராபாளையம் காவல் துறை சார்பில் இன்று காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். தொற்று பரவல் குறைந்திருந்தாலும் குமாரபாளையம் பகுதியில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால்,இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே சுற்றுவதை கட்டுப்படுத்தும் வகையில், இந்த வாகனத் தணிக்கை நடைபெற்றது. இந்த நிகழ்வின் பொழுது அத்தியாவசிய தேவை இன்றி ஊர் சுற்றிய இளைஞர்களின் வாகனங்கள் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!