/* */

பள்ளிபாளையத்தில் ரேசன் டோக்கனுக்கு திரண்ட மக்கள் - திணறிய ஊழியர்கள்!

பள்ளிப்பாளையத்தில், வீடு வீடாக வழங்கப்படும் என்று அறிவித்த போதும், ரேஷன் கடை முன்பு திரண்ட பொதுமக்களால், ஊழியர்கள் திணறி போயினர்.

HIGHLIGHTS

பள்ளிபாளையத்தில் ரேசன் டோக்கனுக்கு  திரண்ட மக்கள் - திணறிய ஊழியர்கள்!
X

பள்ளிபாளையம் ஆவாரங்காடு பகுதியில் உள்ள ரேஷன் கடை முன்பாக, டோக்கன் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்த மக்கள். 

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உள்ள சூழலில், அதை கட்டுப்படுத்த, தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்து, தற்போது கடும் கட்டுபாடுகள் அமலில் உள்ளன.

அதேநேரத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகளில் 13- வகையான மளிகைப் பொருட்கள் ஜூன் மாதம் முதல் வாரம் முதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது அதன்படி, டோக்கன் வினியோகிக்கும் பணி நேற்று முதல் தொடங்கியது. ரேஷன்கடை ஊழியர்கள், வீடு வீடாகச் சென்று, டோக்கன்களை வழங்கி வருகின்றன
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஆவாரங்காடு பகுதியில், 5 நியாயவிலைக் கடைகள் ஒரே இடத்தில் செயல்பட்டு வருகின்றன. கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் வீடு வீடாக டோக்கனை விநியோகம் செய்ய ரேஷன் கடை ஊழியர்கள் திட்டமிட்டு அதன்படி டோக்கனை வழங்கி வருகின்றனர்.
ஆனாலும் டோக்கன் கிடைக்காமல் போய்விடுமோ என்ற கவலையில், பொதுமக்களில் பலர் ரேஷன் கடைக்கு முன்பாக திரண்டனர்.

பொதுமக்கள் கூட்டம் அதிகரிப்பதை கவனித்த நியாயவிலைக்கடை ஊழியர்கள், ரேஷன் கடையின் நுழைவு வாயிலை பூட்டி, பொதுமக்களை வீட்டிற்கு செல்லுமாறு வீடுவீடாக முறைப்படி டோக்கன் வழங்கப்படும் எனவும் கூறி, திருப்பி அனுப்பினர். அதேபோல ரேஷன் கடை வளாக கேட்டில், 5.6.2021 அன்று முதல், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொருட்கள் வழங்கப்படும் எனவும் அறிவிப்பை ஒட்டினர்.

Updated On: 2 Jun 2021 9:14 AM GMT

Related News