கோழிக்கடை ஊழியரை தாக்கிய 7 பேர் கைது

கோழிக்கடை ஊழியரை தாக்கிய 7 பேர் கைது
X
குமாரபாளையத்தில் கோழிக்கடை ஊழியரை தாக்கிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

குமாரபாளையத்தில் கோழிக்கடை ஊழியரை தாக்கிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

குமாரபாளையம் அருகே ஆனங்கூர் சாலை, ஆலாங்காட்டுவலசு பகுதியில் கோழிக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் அதே பகுதியை சேர்ந்த ஜெகதீஷ், 26, என்ற பட்டதாரி வாலிபர், பகுதி நேர ஊழியராக பணியாற்றி வருகிறார்.

சில நாட்கள் முன்பு ஆனங்கூர் சாலை காவடியான்காடு, தனியார் பள்ளி பகுதியில் அடையாளம் தெரியாத இரு நபர்கள் உட்கார்ந்து இருந்துள்ளனர். இது எங்கள் பகுதி, இங்கு அடையாளம் தெரியாத புதிய நபர்கள் அமரக் கூடாது, எழுந்து செல்லுங்கள் என அவர்களிடம் ஜெகதீஷ் கூறியுள்ளார்.

சிறிய வாக்குவாதம் செய்துவிட்டு, அங்கிருந்து சென்றுள்ளனர். இதனை மனதில் வைத்துகொண்டு, நேற்று காலை 08:30 மணியளவில் ஜெகதீஷ் வேலை செய்யும் கடைக்கு வந்த 7 பேர், தகாத வார்த்தை பேசி, ஜெகதீஸை கைகளாலும், கற்களாலும் தாக்கியதில், ஜெகதீஷ்க்கு தலை மற்றும் உடலில் பல இடங்களில் பலத்த ரத்த காயங்கள் ஏற்பட்டன. இது குறித்து ஜெகதீஷ் கொடுத்த புகாரின் பேரில், தாக்குதலில் ஈடுபட்ட கல்லங்காட்டுவலசு, கலியனூர், மேட்டுக்கடை பகுதிகளை சேர்ந்த, சிவராஜ், 40, கனகராஜ், 27, பூபதி, 28, கிருஷ்ணமூர்த்தி, 30, ஜெகநாதன், 30, மோகன்ராஜ், 30, முருகானந்தம், 33, ஆகிய 7 நபர்களை இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையிலான குமாரபாளையம் போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story
ai in future agriculture