தமிழக ஆளுநரை கண்டித்து சி.பி.ஐ. ஆர்ப்பாட்டம்

தமிழக ஆளுநரை கண்டித்து சி.பி.ஐ. ஆர்ப்பாட்டம்
X

தமிழக ஆளுநரை கண்டித்து குமாரபாளையம் சி.பி.ஐ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக ஆளுநரை கண்டித்து குமாரபாளையம் சி.பி.ஐ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காரல் மார்க்ஸ் தத்துவத்தை இழிவாக பேசியதாக தமிழக ஆளுநர் ரவியை கண்டித்து குமாரபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பள்ளிபாளையம் பிரிவு சாலையில் நகர செயலர் கணேஷ்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆளுநர் ரவிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இது குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. இதில் நிர்வாகிகள் அசோகன், அர்த்தனாரி, விஜய்ஆனந்த், சரசு, உள்பட பலர் பங்கேற்றனர்.

மாமேதை கார்ல் மார்க்ஸ் உள்ளிட்ட தலைவர்களை அவதூறாகப் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து ஆளுநர் மாளிகை அருகே சின்னமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர்கள் ஆர்.வேல்முருகன் (தென்சென்னை), ஜி.செல்வா (மத்திய சென்னை), எல்.சுந்தரராஜன் (வடசென்னை) உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஆளுநரின் பேச்சுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

கோவை டாடாபாத் பவர் ஹவுஸ் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோவை எம்.பி. பி.ஆர். நடராஜன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொருளாளர் எம். ஆறுமுகம், மாவட்ட செயலாளர் சி. சிவசாமி மாவட்ட துணை செயலாளர் ஜே.ஜேம்ஸ், மௌ.குணசேகர், சி. தங்கவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் சி. பத்மநாபன், யு.கே. சிவஞானம், இந்திய தேசிய காங்கிரஸ் மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கருப்புசாமி, மறுமலர்ச்சி திராவிடர் முன்னேற்றக் கழகம் சேதுபதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஷாஜி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தனபால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் கே. எம். செல்வராஜ், எஸ். ராதாகிருஷ்ணன், வெ. வசந்தகுமார், கே. ரவீந்திரன், என். சந்திரன், வி.ஆர். பாண்டியன், ஏ.சி. செல்வராஜ், பேரறிவாளன், ஆதித்தமிழர் பேரவை கோவை ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆளுநரின் செயலுக்கு எதிராக தமிழ் புலிகள் கட்சி சார்பாக தேனியில் அவரது உருவ பொம்மை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல் துறையினர் கைது செய்தனர். தேனி நேரு சிலை அருகே ஆளுநர் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!