எங்க ஊர்ல இன்னிக்கு இவ்ளோதாங்க.. கொரோனா- குமாரபாளையம்,பள்ளிபாளையம்

எங்க ஊர்ல இன்னிக்கு இவ்ளோதாங்க..  கொரோனா- குமாரபாளையம்,பள்ளிபாளையம்
X

கொரோனா வைரஸ் மாதிரி படம் 

குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் இன்றைய கொரோனா நிலவரம்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் இன்றைய கொரோனா நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பள்ளிபாளையத்தில் இன்று இதுவரை 3பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மொத்த கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 30பேர். கொரோனாவில் இருந்து 4பேர் மீண்டுள்ளனர்.

குமாரபாளையத்தில் 15பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதையும் சேர்த்து மொத்தம் 73 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 18.

குமாரபாளையத்தில் முழு ஊரடங்கில் ஊர் சுற்றிய 22 பேரை பிடித்து அவர்களுக்கு காவல்துறை தலா ரூ.200அபராதம் விதித்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!