ஊரடங்கால் தியேட்டர்கள் மூடல் : கண்ணீரில் தொழிலாளர்கள்

ஊரடங்கால் தியேட்டர்கள் மூடல் :  கண்ணீரில் தொழிலாளர்கள்
X

பள்ளிபாளையத்தில் உள்ள ஒரு தியேட்டர்.

ஊரடங்கு அறிவிப்பால் தியேட்டர்கள் மூடப்பட்டதால் வேலையின்றி தவிக்கும் தொழிலாளர்கள்

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டதால் பல தொழிலாளர்கள் வேலையிழந்து நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால், தியேட்டர் உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

கொரானா தொற்று 2வது அலை மிக வேகமாக பரவி வருவதால் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் தமிழக அரசும், நாமக்கல் மாவட்ட நிர்வாகமும் மாவட்டம் முழுவதும் உள்ள திரையரங்குகளை திறப்பதற்கு தடை விதித்துள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் 3 திரையரங்குகள் செயல்பட்டு வருகின்றன. தியேட்டர்கள் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், திரையரங்கில் வேலை செய்யும் ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர்.

கடந்த ஆண்டு கொரோனா பரவலுக்குப்பின்னர், சில மாதங்களுக்கு முன்புதான் திரையரங்குகள் திறக்கப்பட்டன. மீட்சியடைந்து வந்த நிலையில் மீண்டும் திரையரங்கங்கள் மூடப்பட்டுள்ளதால் திரையரங்கு உரிமையாளர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். வேலை இழந்து நிற்கும் தொழிலாளர்கள் கண்ணீரில் மிதக்கின்றனர்.

Tags

Next Story