பள்ளிபாளையத்தில் 4 பேருக்கு கொரோனா : மொத்த பாதிப்பு 28

பள்ளிபாளையத்தில்  4 பேருக்கு கொரோனா : மொத்த பாதிப்பு 28
X

பள்ளிபாளையத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பகுதியை தடுப்பு வைத்து மறைக்கும் பணி நடந்தது.

பள்ளிபாளையத்தில் ஓய்வு பெற்ற டாக்டர் உட்பட 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் பள்ளிபாளையத்தில் ஓய்வு பெற்ற டாக்டர் உட்பட 4 பேருக்கு கொரோனா

மொத்த பாதிப்பு 28 உள்பட 4-பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதனால்,அப்பகுதி சாலை தடுப்புகள் அமைக்கப்பட்டு மருத்துவ குழுவினர் கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில், கொரோனா தொற்று இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு செய்து வருகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பழைய காவல் நிலைய சாலை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற மருத்துவர் உள்பட 4 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனால் அந்த பகுதிக்கு யாரும் செல்லாத வகையில் சாலையின் குறுக்கே தடுப்புகள் அமைக்கப்பட்டு கிருமிநாசினி பவுடர்களை அந்தப் பகுதி முழுவதும் தெளித்துள்ளனர். மருத்துவக்குழுவினர் அந்த பகுதியை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பள்ளிபாளையம் நகராட்சியில் தற்போது வரை 28 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்