சும்மா சுத்தினா அபராதம் : குமாரபாளையத்தில் போலீசார் தீவிர வாகன சோதனை

சும்மா சுத்தினா அபராதம் : குமாரபாளையத்தில்   போலீசார் தீவிர வாகன சோதனை
X

கொரோனா வைரஸ் மாதிரி படம் 

முழு ஊரடங்கையொட்டி நேற்று குமாரபாளையம் நகரின் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர்.

குமாரபாளையத்தில் முழு ஊரடங்கையொட்டி போலீசார் முக்கிய இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு உத்தரவிட்டபடி நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. குமாரபாளையம் நகரில் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனை செய்தனர். பள்ளிபாளையம், ஆனங்கூர் பிரிவு ரோடு, சின்னப்பநாயக்கன் பாளையம், காவேரி நகர், சேலம் - கோவை பை பாஸ், கவுரி தியேட்டர் பஸ் நிறுத்தம் போன்ற இடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. அந்த வழியே வந்தவர்களை விசாரித்து ஆவணங்களை சரி பார்த்தனர். தேவையில்லாமல் வந்தவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. 22பேருக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!