குமாரபாளையத்தில் பூத்துக்கு போக தயாராகும் அதிமுக.,திமுக : 'கொரோனா டெஸ்ட்'

குமாரபாளையத்தில்  பூத்துக்கு போக தயாராகும் அதிமுக.,திமுக : கொரோனா டெஸ்ட்
X

திமுக வேட்பாளர் வெங்கடாச்சலத்துக்கு கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது.

வாக்கு எணிக்கை நடக்கும் அன்று பூத்துக்கு செல்வதற்கு அதிமுக மற்றும் திமுகவினருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அ.தி.மு.க.,தி.மு.க கட்சியினரிடையே கொரோனா பரிசோதனையின் போது தகராறு ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக தனித்தனியாக கொரோனா பரிசோதனையை சுகாதார துறையினர் மேற்கொண்டனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் வரும் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதால்.,கொரோனா தொற்று பாதிக்கப்படுவதை தவிர்க்கும் விதமாக வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் அரசியல் கட்சியின் பூத் முகவர்களுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து பூத் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி பூத் முகவர்களுக்கு இருவேறு இடங்களில் கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது பள்ளிபாளையம் நகராட்சியில் அமைக்கப்பட்ட கொரோனா பரிசோதனை மையத்தில் அதிமுகவினருக்கும் மற்றும் பெருமாள்மலை பகுதியில் செயல்பட்டு வரும் திமுக வேட்பாளர் வெங்கடாச்சலத்துக்கு சொந்தமான விசைத்தறிக்கூடத்தில் திமுகவினருக்கும் கொரோனா பரிசோதனையை சுகாதாரத் துறையினர் தனித்தனியாக மேற்கொண்டனர்.

இதில் தி.மு.க வேட்பாளர் வெங்கடாசலம் உள்ளிட்ட தி.மு.க., அ.தி.மு.கவைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.இதன் முடிவுகள் வரும் சனிக்கிழமையன்று தெரிய வரும் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!