மாஸ்க்குகளை கண்ட இடங்களில் வீசாதீர்

மாஸ்க்குகளை கண்ட இடங்களில் வீசாதீர்
X

சாலையில் கிடக்கும் மாஸ்க் மற்றும் கையுறைகள்  (மாதிரி படம்)

மாஸ்க்குகளை கண்ட இடங்களில் வீசுவதை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமாரபாளையத்தில் கண்ட இடங்களில் மாஸ்க்குகளை வீசுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.

கொரோனா பரவல் இரண்டாம் அலை தமிழகம் முழுவதும் வேகமாக அதிகரித்து வருகிறது. தமிழக அரசு இரவு நேர ஊரடங்கை அறிவித்துள்ளது. மாஸ்க் அணிவது கட்டாயம். பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கூட்டமாக குழுமி இருக்க கூடாது என்பன போன்ற கட்டாயம் பின்பற்றவேண்டியவைகளை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இந்த நிலையில் மாஸ்க்குகளை கண்ட இடங்களில் கழட்டி வீசுவது நோய் தொற்று பரவ வழிவகுக்கும். பொது மக்கள் மாஸ்க்குகளை கண்ட கண்ட இடங்களில் வீசாமல் முறையாக அவைகளை அப்புறப்படுத்த வேண்டும். ஆஸ்பத்திரிகளில் பயன்படுத்தப்படும் கையுறைகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என்று ஏற்கனவே சுகாதாரத்துறை அறிவித்து அவைகளை பின்பற்ற வேண்டும் என்று நகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும், பொது மக்கள் அவைகளை முறையாக பின்பற்றாமல் மாஸ்க்குகளை கண்ட இடங்களில் வீசுகின்றனர்.

பல நோய்கள் உள்ளவர்களும் மாஸ்க் அணிந்து இருப்பார்கள். அந்த நோய் கிருமிகள் அந்த மாஸ்க்குகளில் மறைந்து இருக்கும் வாய்ப்புகள் உள்ளன. அவைகள் காற்று மூலமாக அல்லது வேறு வழிகளில் பரவும் அபாயம் உள்ளது. ஆகவே, பொது மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாஸ்க்குகளை கண்ட இடங்களில் வீசுவதை தவிர்க்க வேண்டும். நகராட்சி நிர்வாகமும் மாஸ்க்குகளை கண்ட இடங்களில் வீசுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்