குமாரபாளையத்தில் 8 பேருக்கு கொரோனா உறுதி

குமாரபாளையத்தில்  8 பேருக்கு கொரோனா உறுதி
X

குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் (ஃபைல் படம்)

குமாரபாளையத்தில் 8 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

குமாரபாளையத்தில், 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

குமாரபாளையத்தில், 8 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், குமாரபாளையதில் மட்டுமல்லாமல் ஈரோடு தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். குமாரபாளையம், பள்ளிபாளையம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக பிரசாரம், நோட்டீஸ் வினியோகம், ஆட்டோவில் பிரசாரம் போன்றவை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாஸ்க் அணியாமல் வருவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!