குமாரபாளையம் கோம்பு பள்ளம் தூய்மை படுத்த சேர்மனிடம் கவுன்சிலர் கோரிக்கை

குமாரபாளையம் நிலையம் அருகே உள்ள கோம்பு பள்ளத்தில் இறைச்சி கழிவுகள் அகற்றும் பணியை சேர்மன் விஜய்கண்ணன் ஆய்வு செய்தார்.
Namakkal News Today -குமாரபாளையம் கோம்பு பள்ளம் பகுதியை தூய்மை படுத்த நகராட்சி சேர்மனிடம் கவுன்சிலர் கோரிக்கை விடுத்துள்ளார்.
குமாரபாளையம் கோம்பு பள்ளத்தில் பல வார்டுகளின் கழிவு நீர் செல்கிறது. கத்தேரியில் துவங்கி, நகர எல்லை பகுதியான ராஜம் தியேட்டர் பின்புற பகுதி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காந்திபுரம், பெராந்தர் காடு, வழியாக வந்து பஸ் நிலையம், தம்மண்ணன் சாலை வழியாக சென்று மணிமேகலை வீதியில் காவிரி ஆற்றில் கலக்கிறது. பஸ் நிலைய பகுதியில் மீன் கடைகள், கோழி மற்றும் ஆட்டிறைச்சி கடைகள் அதிகம் உள்ளன. இதன் கழிவுகள் கோம்பு பள்ளத்தில் கொட்டப்படுவதாக அப்பகுதி கவுன்சிலர் நந்தினிதேவி நகராட்சி சேர்மன் விஜய்கண்ணணிடம் புகார் செய்தார். இதையடுத்து கோம்பு பள்ளம் பகுதியை தூய்மை செய்ய தூய்மை பணியாளர்களுக்கு சேர்மன் விஜய் கண்ணன் உத்தரவிட்டார். நேற்றுமுதல் கோம்பு பள்ளத்தில் தூய்மை பணி துவங்கி நடைபெற்று வருகிறது. மேலும் இறைச்சி கழிவுகள் கொட்டுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சேர்மன் கூறி உள்ளார்.
33 வார்டுகளை கொண்டது குமாரபாளையம் நகராட்சி. இதில் சேர்மனாக தி.மு.க.வை சேர்ந்தவர்கள் இதுவரை இருந்து வந்த நிலையில், சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் நேரில் சந்தித்து அ.தி.மு.க. உறுப்பினராகி அ.தி.மு.க. சேர்மனாக தனசேகரன் ஏற்கனவே பொறுப்பேற்றுக் கொண்டார். இவரையடுத்து தி.மு.க.வா? அ.தி.மு.க.வா? என இருந்த நிலையில் நடைபெற்ற முடிந்த தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட விஜய்கண்ணன் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கவுன்சிலர்கள், சுயேச்சை கவுன்சிலர்கள் ஆதரவுடன் யாரும் எதிர்பாரத வகையில் சேர்மனாக பொறுப்பேற்றுக் கொண்டார். நகரில் உள்ள 33 வார்டுகளையும் தனது வார்டாக எண்ணித்தான் பணியாற்றுவேன், ஆதரவு தந்தவர், ஆதரவு தராதவர் வார்டுகள் என பாரபட்சம் பார்க்க மாட்டேன் என பதவியேற்கும் போது சேர்மன் விஜய்கண்ணன் கூறினார்.
அதன்படி அனைத்து வார்டுகளுக்கும் பாரபட்சமின்றி பணிகள் செய்து கொடுத்து வருகிறார். சின்னப்ப நாயக்கன் பாளையம் அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை, தூய்மை பணியாளர்களுக்கு, நகராட்சி பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கினார்.
நெடுஞ்சாலை திட்ட இயக்குனரிடம் தடுப்பு சுவர் கட்ட கோரிக்கை மனுவினை குமாரபாளையம் சேர்மன் வழங்கினார். நகராட்சி பகுதியில் பகுதி சபா கூட்டம், பஸ் நிலைய பொதுக்கழிப்பிடத்திற்கு புதிய போர்வெல், உழவர் சந்தையில் மூலிகை பொருள் விற்பனை மையம் துவக்கம், ஸ்மார்ட் வகுப்பு நடத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி, இரவு பகலாக தேங்கிய மழைநீரை அகற்றிய நகராட்சி நிர்வாகம் ,60 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு விழா, நீர் தேக்கத்தொட்டி அமைக்க பூமி பூஜை,நாய்களுக்கு தடுப்பூசி முகாம், சேர்மன் வழங்கிய 5 கொசு ஒழிப்பு புகை மருந்து தெளிப்பான்,குப்பையில்லா நகராட்சி விழிப்புணர்வு தூய்மைப்பணி, ஓ.ஏ.பி. ஆணை வழங்கிய நகராட்சி சேர்மன்,குடிநீர் பைப் பதிக்கும் பணி ஆய்வு, அரசு பள்ளியில் தானியங்கி நாப்கின் இயந்திரம், தெருவோர வியாபாரிகளுக்கு கடன் வழங்குதல் ஆலோசனை முகாம்,விபத்துக்கள் குறைய வேகத்தடை அமைக்க ஆய்வு உள்ளிட்ட அனைத்து வார்டு மக்களுக்கு தேவையான பணிகளை செய்து வருகிறார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu