குமாரபாளையம் பகுதியில் தொடர் மழை: விவசாயிகள் உழவு பணிகள் துவக்கம்

குமாரபாளையம் பகுதியில் தொடர் மழை: விவசாயிகள் உழவு பணிகள் துவக்கம்
X

குமாரபாளையம் பகுதியில் தொடர் மழையால் விவசாயிகள் உழவுப்பணிகளை துவக்கியுள்ளனர்.

குமாரபாளையம் பகுதியில் பெய்த தொடர் மழையால் விவசாயிகள் உழவுப் பணிகளை துவக்கியுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில் பல நாட்களாக தினமும் மழை பெய்து வருகிறது. இதனால் விவசாய நிலங்கள் பயிர் செய்ய ஏதுவாக உள்ளது. இதனால் டிராக்டர் மூலம் உழவுப்பணிகளை துவக்கியுள்ளனர்.

இது பற்றி விவசாயிகள் கூறியதாவது:

மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்கால் பாசனத்தை நம்பியுள்ள பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில், வாய்காலில் தண்ணீர் திறந்து விடாததால், எவ்வித விவசாயமும் செய்ய முடியாத நிலை இருந்து வந்தது. வழக்கமாக ஜூலை மாத இறுதியில் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடுவார்கள்.

சுமார் ஆறு மாத காலம் தண்ணீர் திறந்து விடுவார்கள். அந்த காலத்திற்குரிய பயிர்கள் சாகுபடி செய்வது வழக்கம். தற்போது தினமும் மழை பெய்து வருவதால், குறுகிய கால பயிர் வகைகளை, கால்நடைகளின் தீவனங்களை விளைவிக்க உதவும் வகையில் நிலம் இளகியுள்ளது. இதனால் டிராக்டர் மூலம் உழவுப்பணிகளை துவக்கியுள்ளோம் என விவசாயிகள் கூறினர்.

தொடர்மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதே மழையால் மற்றொரு தரப்பினர் வருத்தம் கொள்வதும் உண்டு. மாரபாளையத்தில் நேற்று மாலை கனமழை வருவது போல் வானம் மிரட்டிய நிலையில், மழை வராமல் போனது.

நேற்று மாலை இடி, மின்னல் என வானம் அச்சுறுத்தியது. ஆனால் சிறு தூறலுடன் நின்று விட்டது. நடைபாதை கடையினர் மழை வரும் என மிகவும் அச்சமடைந்தனர். தூறலுடன் நின்றதால் மகிழ்ச்சியடைந்தனர். பெருமழையால் மின் சாதனங்கள் பழுதாகும் என மின் விநியோகம் தடை செய்யப்பட்டது. கட்டுமான தொழிலாளர்கள் மழை தொடங்கியதும் வருத்தம் கொண்டனர். தங்கள் பணிகள் வீணாகிவிடுமோ என்று. வட்டமலை பகுதியில் வாரம் தோறும் சந்தை கூடுவது வழக்கம். நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளில், ஆயிரக்கணக்கான மக்கள் பொருட்கள் வாங்கிகொண்டு இருந்தனர்.

தீவிரமான சந்தை வியாபாரம் ஐந்து மணிக்கு மேல்தான். வியாபாரிகள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருந்த வேளையில், மழை வந்ததால், கூட்டம் கலைய தொடங்கியது. இதனால் வியாபாரிகள் கலக்கமடைந்தனர். சாயம் போட்ட நூல்கள் காயாததால் ஜவுளி உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டது. மழையால் ஒரு பக்கம் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும், மற்றொரு பக்கம் வியாபாரிகள், ஜவுளி உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் கலக்கமடைந்து வருகிறார்கள்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil