நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவராக அல்லிமுத்து நியமனம்

நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவராக அல்லிமுத்து நியமனம்
X

நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அல்லிமுத்து.

நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவராக அல்லிமுத்துவை, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மேலிடம் நியமனம் செய்துள்ளது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, வீ.மேட்டூர் பகுதி காங்கிரஸ் கட்சி பிரமுகர் அல்லிமுத்து, 55. இவர், பல ஆண்டுகளாக, காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவில், கட்சிப்பணிகளை செய்து வருகிறார்.

அவரது பணிகளை அங்கீகரிக்கும் வகையில், மாவட்ட தலைவர் செல்வகுமார், மேலிட பார்வையாளர் பச்சமுத்து ஆகியோரின் பரிந்துரையின் பேரில், அல்லிமுத்துவை நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி துணைத் தலைவராக, மாநிலத் தலைவர் அழகிரி நியமனம் செய்துள்ளார். அல்லிமுத்துவுக்கு கட்சியின் மூத்த நிர்வாகிகள், உள்ளூர் பிரமுகர்கள் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story