ஒரு டன் ரேஷன் அரிசி கடத்திய ஆம்னி வேன் பறிமுதல்: 3 பேர் கைது

ஒரு டன் ரேஷன் அரிசி கடத்திய ஆம்னி வேன் பறிமுதல்: 3 பேர் கைது
X

குமாரபாளையம் காவல் நிலையம்.


குமாரபாளையத்தில் ஒரு டன் ரேஷன் அரிசி கடத்தியதாக ஆம்னி வேன் கைப்பற்றி 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலர் வசந்தி, ஆர்.ஐ. பிரவீன்னுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து இவர்களுடன் இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. மலர்விழி நேரில் சென்று, வாரச்சந்தை பின்புற பகுதியில் ஆம்னி வேனுடன் ரேஷன் அரிசி கடத்தப்படுவது தெரியவந்தது.

இது குறித்து வழக்குபதிவு செய்த குமாரபாளையம் போலீசார், பவானியை சேர்ந்த செல்வம், 31, சாமியம்பாளையத்தை சேர்ந்த விமல், 30, கமல், 29, ஆகிய மூன்று பேரும் கைது செய்யப்பட்டதுடன், ஆம்னி வேன் மற்றும் அதிலிருந்த 50 கிலோ எடை கொண்ட 20 அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்