சி.பி.எம் கட்சி மீது அவதூறு பரப்பியவர் மீது காவல்துறையிடம் நிர்வாகிகள் புகார்

சி.பி.எம் கட்சி மீது அவதூறு பரப்பியவர் மீது காவல்துறையிடம் நிர்வாகிகள் புகார்
X

சி.பி.எம் கட்சி மீது அவதூறு பரப்பியவர் மீது  குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்த நிர்வாகிகள்

சி.பி.எம் கட்சி மீது அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கைகோரி குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கட்சி நிர்வாகிகள் குமாரபாளையம் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

இது குறித்து அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: எங்கள் கட்சி மாநில குழு அலுவலகம் ராமமூர்த்தி நினைவகம், சென்னை என பெயரில் அமைந்துள்ளது. மக்கள் தலைவரை, எங்கள் கட்சியை களங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், சில சமூக விரோதிகள் ராமமூர்த்தி நினைவகம் முன்பு, அடுத்தவன் காலை நக்கி பிழைப்பவன் கம்யூனிஸ்ட் என்று குறிப்பிட்டு வாட்ஸ் அப் -பில் ஊர் முழுதும் அவதூறு பரப்பி உள்ளனர். இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த புகார் மனுவை நகர செயலர் சக்திவேல், ஒன்றிய நிர்வாகி முருகேசன், நிர்வாகிகள் வெங்கடேசன் உள்பட பலர் குமாரபாளையம் போலீசில் ஒப்படைத்தனர்.இதில் நிர்வாகிகள் சண்முகம், கந்தசாமி, மாதேஸ்வரன், வெங்கடேசன், சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்..


Tags

Next Story
காசநோய், டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு: ஈரோட்டில் விழிப்புணர்வு முகாம்