பள்ளிபாளையத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரசுப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது

சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம், ஜூன் 12 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு திட்ட அமைப்புகள் சார்பில், விழிப்புணர்வு நிகழ்வு, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், மத்திய அரசு இயக்குனர் ஆண்டனி ரெனிதா சரளா ஆகியோர் துவக்கி வைத்தார். தேசிய குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு திட்டத்தின் கீழ் பயன் பெறும் பள்ளி மாணவர்களுக்கும், அவர்களுடைய பெற்றோர்களுக்கும் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்றும், பெற்றோர்கள் இனி எங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்ப மாட்டோம் எனவும் உறுதிமொழி ஏற்றனர்.

பின்பு, தேசிய குழந்தை தொழிலாளர் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு வேர்டு நிறுவனத்தின் சார்பாக உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. இத்திட்டமானது முழுமையாக CACL அமைப்பின் மூலம் ஏற்பாடு செய்யபட்டு நடைபெற்றது. இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்டோர், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா வழிகாட்டுதல்களை கடைபிடித்து கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture