குமாரபாளையத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்ற மக்களுடன் முதல்வர் முகாம்

குமாரபாளையத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்ற மக்களுடன் முதல்வர் முகாம்
X

குமாரபாளையத்தில் நடந்த மக்களுடன் முதல்வர் முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

குமாரபாளையத்தில் நடந்த மக்களுடன் முதல்வர் முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் தட்டான்குட்டை ஊராட்சி மற்றும் சுற்றியுள்ள பகுதி மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கும் வகையில் மக்களுடன் முதல்வர் முகாம் நடந்தது.

இதில் வருவாய்த்துறை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, மின்வாரியம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு, வேளாண்மைத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் மீன் வளத்துறை, முதல்வரின் விரிவான மருத்துவ மருத்துவ காப்பீடு திட்டம், ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை, தொழிலாளர் நலத்துறை மற்றும் வேலைவாய்ப்புத்துறை, சமூக நலத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வாழ்வாதார கடன்கள், மாவட்ட தொழில் மையம், தமிழ்நாடு கூட்டுறவு வங்கிகள், தாட்கோ, டேம்கோ, டாப்செட்கோ, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகம் முன்னோடி வங்கி, இ.சேவை மையம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட துறைகள் சம்பந்தமான புகார் மனுக்களை, அந்தந்த துறை அதிகாரிகள் வசம் பொதுமக்கள் வழங்கினர். குறிப்பிட சில மனுக்கள் மீது உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அதற்கான சான்று வழங்கப்பட்டன.

Tags

Next Story