காணொளி காட்சி மூலம் விவசாயிகளிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின்

காணொளி காட்சி மூலம் விவசாயிகளிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின்
X

குமாரபாளையத்தில் காணொளி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் விவசாயிகளிடம் பேசினார்.

குமாரபாளையத்தில் காணொளி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் விவசாயிகளிடம் பேசினார்.

ஓராண்டில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு பெற்றவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடும் நிகழ்வு குமாரபாளையம் அருகே தனியார் கல்லூரி வளாகத்தில் சங்ககிரி, மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜ் தலைமையில் நடைபெற்றது. விவசாயிகளிடம் காணொளி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார்.

முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், எங்கள் ஆட்சியில் நாங்கள் செய்ததை நான் சொல்வதை விட, எங்கள் அமைச்சர்கள் சொல்வதை விட, விவசாயிகளான நீங்கள் சொல்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு திட்டம் செயல்படுத்தப்படுவது என்பது, அது பயனாளிகளை சென்று சேருவதில் உள்ளது.

2021, செப். 23ல் இந்த திட்டத்தை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில் ஓராண்டில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு திட்டம் துவக்கி வைத்தேன். ஓராண்டு நிறைவு பெறும் முன்பே இந்த திட்டம் நிறைவு பெற்றுள்ளது. இந்த ஒரு லட்சம் குடும்பங்கள் அடையும் மகிழ்ச்சியை விட, இவர்கள் செய்யும் வேளாண்மையால் இந்த நாடு அடையவிருக்கும் நன்மையை நாம் நினைத்து மகிழ வேண்டும். 1990 வரை வேளாண்மை மின் இணைப்புக்கு கட்டணம் செலுத்தி வந்தார்கள். 1990, நவ 19ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்க உத்திரவிட்டார்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளிபாளையம் மின் வாரிய செயற்பொறியாளர் கோபால், தி.மு.க. ஒன்றிய செயலர் யுவராஜ், உள்ளிட்ட விவசாயிகள் பெருமளவில் பங்கேற்றனர்.

Tags

Next Story
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்