ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை காணொளி மூலம் தொடங்கி வைத்த முதல்வர்

ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை  காணொளி மூலம் தொடங்கி வைத்த முதல்வர்
X

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் தொடங்கி வைத்தார்.

குமாரபாளையத்தில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை காணொளி மூலம் முதல்வர் தொடங்கி வைத்தார்.

வேளாண்மை, உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி தொடங்கி வைக்கும் விழா குமாரபாளையத்தில் நடைபெற்றது.

குமாரபாளையம் பகுதி தட்டான்குட்டை ஊராட்சி சமுதாய கூடத்தில் நடைபெற்ற விழாவில், ஊராட்சிமன்றத் தலைவர் புஷ்பா தலைமை தாங்கினார். இதில் துணை வேளாண்மை அலுவலர் குப்பண்ணன் பங்கேற்று திட்டம் குறித்து விவசாயிகளிடம் விளக்கி கூறினார்.

அப்போது, இந்த திட்டம் 5 ஆண்டுகளில் மாநிலத்தில் உள்ள 12 ஆயிரத்து 524 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. 2022, 2023ம் ஆண்டில் இத்திட்டம் 3 ஆயிரத்து 204 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட உள்ளது என பேசினார்.

உதவி வேளாண்மை அலுவலர்கள் காமேஷ், சரவணன், உதவி தோட்டக்கலை அலுவலர் சக்திவேல், உதவயு வேளாண்மை வணிக அலுவலர் பாலமுருகன், உதவி விதை அலுவலர் பிரகாஷ், உதவி தொழில் நுட்ப மேலாளர் பிரியங்கா உள்ளிட்ட விவசாயிகள் பெருமளவில் பங்கேற்றனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil