குமாரபாளையம் அம்மா உணவகத்தில் ஆய்வு செய்த சேர்மன்

குமாரபாளையம் அம்மா உணவகத்தில் ஆய்வு செய்த சேர்மன்
X

குமாரபாளையம் அம்மா உணவகத்தில் நகராட்சி சேர்மன் ஆய்வு செய்தார்.

Amma Unavagam -குமாரபாளையம் அம்மா உணவகத்தில் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

Amma Unavagam -குமாரபாளையம் அம்மா உணவகத்தில் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் ஆய்வு செய்தார். பொதுமக்களிடம் உணவு குறித்து கேட்டறிந்தார். பணியாளர்களிடம் அம்மா உணவகத்திற்கு தேவையான உதவிகள் குறித்து கேட்டறிந்தார். ஏழை மக்கள் உணவருந்த வரும் நிலையில், அவர்களுக்கு அன்புடன் உணவு பரிமாற அறிவுறுத்தினார்.

குமாரபாளையம் அம்மா உணவகத்தில் நீராவி கொதிகலன் செயல்பாட்டினை சேர்மன் ஆய்வு செய்தார்.

ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதும், கடந்த ஆட்சியில் செயல்பட்டு வந்த அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படவேண்டுமென்ற அறிவுறுத்தலின்படி, குமாரபாளையம் அம்மா உணவகத்தில் காலை மற்றும் மதிய வேளையில் மலிவு விலையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இங்கு பழுதடைந்த நீராவி கொதிக்கலன் மற்றும் வெட் கிரைண்டர் புதிதாக பொருத்தும் பணி மற்றும் சமையல்கூட பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் நேரில் ஆய்வு செய்தார்.

குமாரபாளையம் நகராட்சி பகுதியில் ஓ.ஏ.பி.க்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஓ.ஏ.பி. பெற தகுதி உள்ளவர்தானா? என சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஜானகி தீவிர விசாரணை செய்து, உரிய நபர்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இதன்படி நகராட்சி சேர்மனிடம் முதியோர் பலர் ஓ.ஏ.பி. விண்ணப்பங்கள் கொடுத்து உதவி கேட்டு வருகின்றனர். இவர்களின் விண்ணப்பங்கள் சரி பார்க்கப்பட்டு பரிசீலித்து ஓ.ஏ.பி. ஆணை தாசில்தாரால் வழங்கபடுகிறது. இந்த ஆணைகளை 15வது வார்டு பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்வு நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. சேர்மன் விஜய்கண்ணன் பங்கேற்று தகுதியான முதியோர்களுக்கு ஓ.ஏ.பி. ஆணைகளை வழங்கினார்.

குமாரபாளையம் நகராட்சி சார்பில் குப்பையில்லா நகராட்சி விழிப்புணர்வு தூய்மை பணி நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் கம்பன் நகரில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் மக்கும், குப்பை, மக்காத குப்பை தரம் பிரித்து வழங்குதல், சுற்றுப்புற பகுதியை தூய்மையாக வைத்திருத்தல், உள்ளிட்ட கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டன. தூய்மையாக வைத்திருப்போம் என பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். வீடு, வீடாக துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தானியங்கி நாப்கின் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பயன்பாட்டினை நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் ஆய்வு செய்தார். 5 ரூபாய் நாணயம் போட்டால் நாப்கின் வரும் வகையில் இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை எரியூட்டும் இயந்திரமும் பொருத்தப்பட்டுள்ளது. மாணவியர்களுக்கு ஆசிரியைகள் இதனை பயன்படுத்தும் முறை குறித்து கற்றுக்கொடுத்தனர்.

குமாரபாளையம் நகராட்சி சார்பில் குப்பையில்லா நகராட்சி, காவேரி ஆற்றுப்படுகை கூட்டு தூய்மை பணி குறித்த விழிப்புணர்வு பேரணி நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. பஸ் ஸ்டாண்டில் துவங்கிய இந்த பேரணியை எஸ்.ஐ. மலர்விழி துவக்கிவைத்தார். விட்டலபுரி, சேலம் சாலை, பள்ளிபாளையம் சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் சென்ற பேரணி நகராட்சி அலுவலகத்தில் நிறைவு பெற்றது. தூய்மை பணிகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாதைகள் கைகளில் ஏந்தியவாறும், துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வினியோகித்தவாறும், கோஷங்கள் போட்டவாறும் அரசு கல்வியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர் சென்றனர்.

இதில் கவுன்சிலர்கள் அழகேசன், ஜேம்ஸ், வேல்முருகன், கோவிந்தராஜ், கிருஷ்ணவேணி, சியாமளா, நிர்வாகிகள் மாநில செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், செந்தில்குமார், சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

மேலும் பஸ் ஸ்டாண்டில் புதிதாக போடப்பட்ட சேர்களை சேர்மன் ஆய்வு செய்து பயணிகளை அமர வைத்தார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!