வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை: அகற்றும் பணி தீவிரம்
கால்வாயில் ஆகாயத்தாமரை அகற்றும் பணியை பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கணேஷ் நேரில் பார்வையிட்டார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து கிழக்குக்கரை கால்வாயில் திறந்துவிடப்படும் தண்ணீர், தேவூர் அருகே அரசிராமணி குள்ளம்பட்டி, கல்லம்பாளையம், அம்மாபாளையம், புள்ளாக்கவுண்டம்பட்டி, கத்தேரி வழியாக நாமக்கல் மாவட்டம் குப்பாண்டபாளையம், வெப்படை வரை செல்கிறது.
இதில் பொன்னம்பாளையம் பகுதியில் இருந்து பிரிந்து கிளை வாய்க்கால் பூமணியூர் பாலம், ஒக்கிலிப்பட்டி, தண்ணிதாசனூர், வட்ராம்பாளையம், சோழக்கவுண்டனூர், சுண்ணாம்புகரட்டூர், பாலிருச்சம்பாளையம் வழியாக கடந்து சென்று, அண்ணமார் கோவில் பகுதியில், காவிரி ஆற்றில் கலக்கிறது.
கடந்த சில நாட்களாக, கிளை வாய்க்காலில் அதிகளவில் ஆகாயத்தாமரை கொடிகள் சூழ்ந்து, வாய்காலில் ஆக்கிரமித்து உள்ளதால் தண்ணீர் விரைந்து கடைமடை பகுதிகளுக்கு செல்ல முடியாமல் தடைபட்டது. இதனையடுத்து, அரசிராமணி குள்ளம்பட்டி பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கணேஷ் நேரில் பார்வையிட்டு, ஆகாயத்தாமரை கொடிகளை அகற்ற உத்தரவிட்டார். அதன்படி, ஆகாயத்தாமரை உள்ளிட்டவற்றை அகற்றும் பணியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu