ஊரடங்கு தளர்வு:விசைத்தறிகளை இயக்கலாமா என்ற எதிர்பார்ப்பில் தொழிலாளர்கள்.

ஊரடங்கு தளர்வு:விசைத்தறிகளை இயக்கலாமா என்ற எதிர்பார்ப்பில் தொழிலாளர்கள்.
X

கோப்பு படம்

தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகளில் விசைத்தறிகளை இயக்கலாமா என்ற எதிர்பார்ப்பில் பள்ளிபாளையம், குமாரபாளையம் தொழிலாளர்கள் உள்ளனர்

கொரோனா பரவல் காரணமாக நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில்,பிரதான தொழிலாக உள்ள விசைத்தறி கூடங்களை இயக்குவதற்கு நாமக்கல் மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.இதனால் கடந்த. 2 மாதத்திற்கு மேலாக விசைத்தறி தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் கடும் பொருளாதார பாதிப்பை சந்தித்து வந்தனர்.

தற்போது நாமக்கல் மாவட்டத்தின் கொரோனா பரவல் தற்போது குறைந்துள்ளதால்,சில தளர்வுகளுடன் கடைகளை திறக்க தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. இதனால் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் விசைத்தறிக் கூடங்களை மீண்டும் இயக்குவதற்கு நாமக்கல் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்குமா? என தொழிலாளர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு