நீல நிறமாக சென்ற சாயக்கழிவு நீரால் பொதுமக்கள் அதிர்ச்சி

நீல நிறமாக சென்ற சாயக்கழிவு நீரால் பொதுமக்கள் அதிர்ச்சி
குமாரபாளையம் கோம்பு பள்ளத்தில் நீல நிறமாக சென்ற சாயக்கழிவு நீரால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
குமாரபாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் 200க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் உள்ளன. இவைகளில் விசைத்தறி மற்றும் கைத்தறி ரகங்களுக்கு தேவையான நூல்களுக்கு சாயம் போடப்படுகிறது. இவைகளில் அனுமதி பெற்ற சாயப்பட்டறைகள், அனுமதி பெறாத சாயப்பட்டறைகள் உள்ளன. அனுமதி பெற்ற சாயப்பட்டறைகள் உள்ளிட்ட அனைத்தும் சாயக்கழிவு நீரை சுத்திகரிப்பு செய்துதான் வெளியேற்ற வேண்டும் என மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வலியுறித்தி வருகின்றனர்.
இருப்பினும் சில நபர்கள் சுத்திகரிப்பு செய்யாமல் சாயகழிவு நீரை அப்படியே காவிரி ஆற்றில் கலக்க விடுகின்றனர். இதனை தடுக்கும் வகையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து, பொக்லின் உதவியுடன் இடித்து வருகின்றனர். மேலும் மின் இணைப்பும் துண்டித்து வருகின்றனர். இப்படிப்பட்ட பட்டறைகளில் மாற்று வழியில் உள்ளே நுழைந்து, ஜெனரேட்டர் மூலம் சாயம் போடும் பணியை இரவில் செய்கின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதுதான்.
நேற்று காலை குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கழிவுநீர் செல்லும், கோம்பு பள்ளத்தில் நீல நிறமாக சாயக்கழிவு நீர் சென்று, காவிரியில் கலந்தது. குடிநீரை விஷமாக்கும் இது போன்ற நபர்கள் மீது தயவு தாட்சண்யம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமாரபாளையத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
குமாரபாளையம் நகராட்சி பகுதிகளில் உள்ள சாலையோர கடைகள், தினசரி காய்கறி மார்க்கெட், பூக்கடைகள், பழக்கடைகள், ஓட்டல், பேக்கரி, மளிகை, உள்ளிட்ட பல கடைகளில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் மணிவண்ணன், குமாரபாளையம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ராமமூர்த்தி தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் கேரிபேக், பிளாஸ்டிக் டம்ளர்கள், உள்ளிட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் 8 கிலோ பறிமுதல் செய்து, நான்காயிரத்து 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இரு துறை அதிகாரிகளாலும் இந்த ஆய்வு தினசரி தொடரும் என வியாபார நிறுவனத்தாருக்கு அறிவுறுத்தப்பட்டது. நகராட்சி சார்பில் எஸ்.ஓ. செல்வராஜ், சந்தானகிருஷ்ணன், ஜான்ராஜா, மாசுக்கட்டுபாட்டு வாரியம் சார்பில் உதவி பொறியாளர்கள் சந்தானம், விஜயன், உள்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu