பேருந்து நிலைய கட்டுமான பணி! அடிக்கல் நாட்டிய முதல்வர்!

பேருந்து நிலைய  கட்டுமான பணி! அடிக்கல் நாட்டிய முதல்வர்!
X

படவிளக்கம்:

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பல கட்டுமான பணிகளை மாவட்ட தி.மு,க. செயலர் மதுரா செந்தில், நகராட்சி தலைவரும், நகர வடக்கு தி.மு.க. செயலர் விஜய்கண்ணன், நகர மேற்கு தி.மு.க. செயலர் ஞானசேகரன், உள்ளிட்ட நிர்வாகிகள் துவக்கி வைத்தனர்.

காணொளி காட்சி மூலம் குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

காணொளி காட்சி மூலம் பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலின்

காணொளி காட்சி மூலம் குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

குமாரபாளையம் நகராட்சி கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 738.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 902.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கசடு கழிவு சுத்திகரிப்பு நிலையம் மற்றும் 728.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீரை சேகரம் செய்து குழாய் மூலம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நாமக்கல் மாவட்ட தி.மு.க. செயலர் மதுரா செந்தில் தலைமையில் நடந்தது. தமிழக முதல்வர் ஸ்டாலின், காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். கட்டுமான பணிகளை நகராட்சி தலைவரும், நகர வடக்கு தி.மு.க. செயலர் விஜய்கண்ணன், நகர மேற்கு தி.மு.க. செயலர் ஞானசேகரன், நகராட்சி துணை தலைவர் வெங்கடேசன், நகராட்சி ஆணையாளர் சரவணன், நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், மாவட்ட தி.மு.க. பொருளாளர் ராஜாராம் உள்பட நகர்மன்ற உறுபினர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்