குமாரபாளையத்தில் அண்ணனை கத்திரியால் குத்திய தம்பி: போலீசார் விசாரணை
கத்திரியால் குத்தப்பட்ட காயங்களுடன் தினேஸ்குமார்.
குமாரபாளையத்தில் குடும்ப தகறாறு காரணமாக அண்ணனை தம்பி கத்திரியால் குத்தினார்.
குமாரபாளையம் காவேரி நகரில் வசிப்பவர் ராமலிங்கம், 60. இவருக்கு தினேஷ்குமார், 28, புவனேஸ்வரன், 26, இரு மகன்கள் உள்ளனர். ராமலிங்கம் மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று தனியாக வசித்து வருகிறார். குடும்ப தகறாறு காரணமாக நேற்று காலை 11.30 மணியளவில் தினேஸ்குமாரை, புவனேஸ்வரன் கத்திரியால் குத்தியதாக கூறப்படுகிறது.
இது குறித்து தினேஸ்குமார் கூறியதாவது:- அப்பாவிடம் 2 லட்சமும், என்னிடம் ஒரு லட்சம் ரூபாயும் தம்பி புவனேஸ்வரன் கடனாக வாங்கியிருந்தான். பலமுறை கேட்டும் தரவில்லை. அப்பா வைத்திய செலவிற்கு பணம் வேண்டும் என்பதால் தம்பியிடம் அப்பா பணம் கேட்க, அவரை அடித்துள்ளான். இது பற்றி தகவலறிந்த நான், அவனை கேட்க, என் வீட்டிற்கு வந்த அவன் வாக்குவாதம் செய்த போது, ஒரு கட்டத்தில் கத்திரியை எடுத்து, என் இடது கண்ணனுக்கு அருகில் குத்தி விட்டான். இவனுடன் அதே பகுதியை சேர்ந்த நாகராஜ், ரமேஸ் வந்திருந்தனர். அவர்கள்தான் தடுத்தனர். இது பற்றி குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்துள்ளேன். தம்பி தி.மு.க.வில் நகர இளைஞர் அணி துணை செயலராக உள்ளதால், நகர பொறுப்பாளர் செல்வத்திடம் இது பற்றி சொல்லியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
இது பற்றி நகர பொறுப்பாளர் தி.மு.க. செல்வம் கூறியதாவது:- அப்பாவின் பி.எப். பணத்தில் மகனுக்கு உரிமை உள்ளதால் புவனேஸ்வரன் பணம் வாங்கியதாக கூறியுள்ளான். அவன் அண்ணன் தினேஸ்குமாரும் பணம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். தினேஸ்குமார் ஒன்றாவது வார்டு தி.மு.க. உறுப்பினராக உள்ளார். இந்த புகார் குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu