குமாரபாளையம் அருகே காளியம்மன் திருவிழாவில் முப்பாடு, கூத்தாண்டவர் அழைத்து வருதல்

குமாரபாளையம் அருகே காளியம்மன் திருவிழாவில் முப்பாடு, கூத்தாண்டவர் அழைத்து வருதல்
X

குமாரபாளையம் அருகே கோட்டைமேடு காளியம்மன், மாரியம்மன் திருவிழாவையொட்டி முப்பாடு, குதிரை அழைப்பு, கூத்தாண்டவர் அழைப்பு நடைபெற்றது.

குமாரபாளையம் அருகே காளியம்மன் கோவில் திருவிழாவில் முப்பாடு, கூத்தாண்டவர் அழைத்து வரும் நிகழ்வு நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே கோட்டைமேடு பத்ரகாளியம்மன் கோவில், மாரியம்மன் கோவில் திருவிழா பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இதில் முப்பாடு மற்றும் கூத்தண்டார் அழைப்பு நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு வேட்டுவ கவுண்டர் சமுதாயத்தினர் சார்பில், கிராமத்து கவுண்டர் சிதம்பரம் தலைமையில், அருவங்காடு பகுதியில் இருந்து முப்பாடு, குதிரை அழைத்து வருதல் நிகழ்வு புறப்பட்டு கோட்டைமேடு காளியம்மன் கோவிலில் நிறைவு பெற்றது.

தட்டான்குட்டை ஊராட்சி, வீரப்பம்பாளையம் பகுதியில் இருந்து முப்பாடு மற்றும் கூத்தாண்டவர் அழைப்பு, மாப்பிளை சீர் ஆகியன புறப்பட்டு, கோட்டைமேடு மாரியம்மன் கோவிலில் நிறைவு பெற்றது.

முப்பாடு, கூத்தாண்டவர் மாப்பிள்ளை அழைப்பில் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று மேளதாளத்துடன் ஆடியபடி வந்தனர். 18 பட்டி முதன்மையாளர்கள் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

கோட்டைமேடு காளியம்மன் மற்றும் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்