பவானியில் புத்தக கண்காட்சி, துவக்கி வைத்த போலீஸ் டி.எஸ்.பி சண்முகம்

பவானியில் புத்தக கண்காட்சி, துவக்கி வைத்த போலீஸ் டி.எஸ்.பி சண்முகம்
X

குமாரபாளையம் விடியல் ஆரம்பம், ஈரோடு செஞ்சுரி புக் ஷாப் சார்பில் அமைக்கப்பட்ட புத்தக கண்காட்சியை ஈரோடு மாவட்ட டி.எஸ்.பி. சண்முகம் பங்கேற்று, ரிப்பன் வெட்டி புத்தக கண்காட்சியை திறந்து வைத்தார்.

பவானியில் விடியல் ஆரம்பம் அமைப்பு சார்பில் புத்தக கண்காட்சியை போலீஸ் டிஎஸ்பி சண்முகம் ரிப்பன் கட் செய்து துவக்கி வைத்தார்.

குமாரபாளையம் விடியல் ஆரம்பம், ஈரோடு செஞ்சுரி புக் ஷாப் சார்பில் புத்தக கண்காட்சி திறப்பு விழா பவானி வாசவி மகாலில் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக ஈரோடு மாவட்ட டி.எஸ்.பி. சண்முகம் பங்கேற்று, ரிப்பன் வெட்டி புத்தக கண்காட்சியை திறந்து வைத்தார். முதல் விற்பனையை வக்கீல் மோகன் துவக்கி வைக்க, தமிழ்நாடு கைத்தறி நலவாரிய உறுப்பினர் நாகராஜன் பெற்றுக்கொண்டார்.

குமாரபாளையம் விடியல் ஆரம்பம், ஈரோடு செஞ்சுரி புக் ஷாப் சார்பில் அமைக்கப்பட்ட புத்தக கண்காட்சியை திறந்து வைத்த ஈரோடு மாவட்ட டி.எஸ்.பி. சண்முகம் முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

புத்தக கண்காட்சி திறப்பு விழாவையொட்டி பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பேச்சு, கட்டுரை, வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு பரிசாக புத்தகங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், கல்வியாளர் இளவரசன், டாக்டர் நடராஜ், வாசவி கார்மெண்ட்ஸ் மனோகர் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!