குமாரபாளையத்தில் புத்தக கண்காட்சி நிறைவு விழா மற்றும் கணித மேதை ராமனுஜம் பிறந்த நாள் விழா
படவிளக்கம் : குமாரபாளையத்தில் புத்தக கண்காட்சி நிறைவுவிழா மற்றும் கணித மேதை ராமானுஜம் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
புத்தக கண்காட்சி நிறைவு விழா மற்றும் கணித மேதை ராமனுஜம் பிறந்த நாள் விழா
குமாரபாளையத்தில் புத்தக கண்காட்சி நிறைவுவிழா மற்றும் கணித மேதை ராமானுஜம் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
குமாரபாளையம் விடியல் ஆரம்பம் பொதுநல அமைப்பு சார்பாக மூன்றாம் ஆண்டு புத்தகக் கண்காட்சி பள்ளிபாளையம் பிரிவு சாலை அருகே, சம்பூரணி அம்மாள் திருமண மண்டபத்தில் டிச.15ல் துவங்கியது. இதன் நிறைவுவிழா அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் நடந்தது. நூல் எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், புத்தக கண்காட்சி நடத்த உறுதுணையாக இருந்தவர்கள், பள்ளி மாணவர்களை அனுப்பி வைத்த தலைமை ஆசிரியர்கள், பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் என பலதரப்பட்டவர்கள் கவுரவிக்கப்பட்டனர். அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளி சார்பில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் புத்தகத்தின் அருமை குறித்தும், புத்தக கண்காட்சியின் அத்தியாவசியம் குறித்தும் மாணாக்கர்கள் வில்லுப்பாட்டு மூலம் எடுத்துரைத்தனர். கணிதமேதை ராமானுஜம் பிறந்த நாளையொட்டி, அவரது திருவுருவப்படத்திற்கு மலர் மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ராமானுஜம் குறித்து பேச்சு, கட்டுரை, ஓவியம், வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை சிறு, குறு ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் வழங்கினர்.
இதில் சமூக சேவகி சித்ரா, தன்னார்வலர்கள் ஜமுனா, சித்ரா, நிர்வாகிகள் தீனா, பஞ்சாலை சண்முகம் உள்பட பலர் பங்கேற்றனர்.
சீனிவாச இராமானுஜன் (டிசம்பர் 22, 1887 - ஏப்ரல் 26, 1920) ஒரு இந்திய கணிதவியலாளர் ஆவார். இவர் ஒரு தன்னம்பிக்கை வாய்ந்த கணித மேதையாக அறியப்படுகிறார். இவர் தனது சொந்த ஆற்றலால், பல கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார்.
ராமானுஜன் இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள ஈரோட்டில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை ஒரு துணிக்கடைக்காரராக வேலை செய்தார். ராமானுஜனுக்கு சிறு வயதிலிருந்தே கணிதத்தில் ஆர்வம் இருந்தது. இவர் 13 வயதில் ஒரு கணித புத்தகத்தைப் படித்தார். அதில் உள்ள கணிதத் தேற்றங்களைப் புரிந்துகொண்டு, அவற்றை சரியாக தீர்த்தார்.
ராமானுஜனின் திறமையை அறிந்த அவரது நண்பர், ராமானுஜனை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள பிரபல கணிதவியலாளர் ஜி.எச்.ஹார்டிக்கு அறிமுகப்படுத்தினார். ஹார்டி ராமானுஜனின் திறமையை வியந்து, அவரது படிப்புக்கு உதவினார்.
ராமானுஜன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகள் படித்தார். அங்கு அவர் பல புதிய கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார். இவரது தேற்றங்கள் உலகின் முன்னணி கணிதவியலாளர்களால் பாராட்டப்பட்டன.
ராமானுஜனின் ஆராய்ச்சிகள் கணிதத்தில் புதிய பாதையை உருவாக்கியது. இவரது தேற்றங்கள் இன்றும் கணித ஆராய்ச்சியில் பயன்படுத்தப்படுகின்றன.
ராமானுஜன் தனது இளம் வயதிலேயே நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டார். இந்த நோயால் அவதிப்பட்ட அவர், 1920 இல் 32 வயதில் இறந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu