குமாரபாளையம், JKKN கல்வி நிறுவனத்தில் மாபெரும் ரத்ததான முகாம்
ரத்ததான முகாமை தொடங்கி வைத்த JKKN கல்வி நிறுவனங்களின் இயக்குனர் ஓம் சரவணா.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், JKKN கல்வி நிறுவனம், யுவா சங்கம் மற்றும் IRT பெருந்துறை மருத்துவக்கல்லூரி இணைந்து, மாபெரும் இரத்ததான முகாமினை நடத்தின.
9ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை குமாரபாளையம், JKKN கல்வி நிறுவன வளாகத்தில் நடந்த இந்த ரத்ததான முகாமை JKKN கல்வி நிறுவனங்களின் இயக்குனர் ஓம் சரவணா துவக்கி வைத்ததோடு,மாணவ, மாணவியர்களையும், தன்னார்வலர்களையும், ஊக்கப்படுத்தினார்.
தொடர்ந்து அவர்பேசுகையில், 'தற்போதைய காலக்கட்டத்தில் நோயாளிகளுக்கான ரத்ததேவை அதிகரித்துள்ளது. இரத்தம் கிடைக்காமல் பலர் மிகுந்த சிரமப்படுகின்றனர். சில உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே,தன்னார்வலர்கள் தாமாக முன்வந்து உயிர்காக்க, இரத்ததானம் செய்யவேண்டும். மேலும் ஒருவர் ரத்தம் கொடுக்கும்போது அவருக்கு புதிய ரத்தம் உற்பத்தியாகிறது. அதன்மூலம் அவர் புத்துணர்ச்சியடைகிறார். எனவே, ரத்தம் தானம் செய்வதற்கு தயங்க கூடாது.' இவ்வாறு அவர் பேசினார்.
இந்த இரத்ததான முகாமில் 71 பேர் இரத்ததானம் செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu