JKKN கல்வி நிறுவனம், ஈரோடு அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்த தான முகாம்
இரத்த தானம் செய்யும் இயக்குனர் ஓம் சரவணா.
JKKN கல்வி நிறுவனங்களும், ஈரோடு அரசு மருத்துவமனை இரத்த வங்கியும் இணைந்து நடத்திய மாபெரும் இரத்த தான முகாம் இன்று குமாரபாளையம், JKKN கல்லூரி வளாகத்தில் நடந்தது.
இரத்த தான முகாமினை JKKN கல்வி நிறுவனங்களின் இயக்குநர் ஓம்சரவணா துவக்கி வைத்தார். பின்னர் அவரும் இரத்த தானம் செய்தார். இந்த இரத்த தான முகாமில் JKKN பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் இரத்த தானம் செய்தனர்.
ஒரு உயிர் அபாய கட்டத்தில் இருக்கும்போது மருத்துவ சிகிச்சைக்கு அவசர இரத்தம் தேவைப்படும். அதுவும் அவர்களுக்கு தேவையான குரூப் இரத்தம் தேவைப்படும். அப்படி ஆபத்தில் இருக்கும் மனித உயிர்களை காப்பாற்ற நம் இரத்தம் பயன்படும். ஒரு மனித உயிரை காப்பாற்றிய பெருமையை நாம் உணர முடியும். அதற்காகவே பல அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் ரத்த தான முகாமை நடத்துவது வழக்கம். அவ்வாறு சேகரிக்கப்பட்ட இரத்தம் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்கு வருபவர்களுக்கு இலவசமாக செலுத்தப்படும்.
அந்த வகையில் இன்று JKKN கல்வி நிறுவனங்களும், ஈரோடு அரசு மருத்துவமனை இரத்த வங்கியும் இணைந்து நடத்திய இரத்த தான முகாமில் கலந்து கொண்டு இரத்தம் அளித்த கொடையாளர்களின் இரத்தம் யாரோ ஒருவரது உயிரைக் காப்பாற்ற பயன்படப்போகிறது என்பது நமக்கெல்லாம் பெருமை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu