பேருந்து நிறுத்தத்தை சுத்தம் செய்த பா.ஜ.க.வினர்
பைல் படம்
குமாரபாளையம் அருகே பஸ் ஸ்டாப்பை பா.ஜ.க.வினர் தூய்மை படுத்தினர்.
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை உத்திரவின்படி, பா.ஜ.க.வினர் அந்தந்த பகுதி பொது இடங்களில் தூய்மை பணி மேற்கொள்ளுங்கள் என்றதன்படி,குமாரபாளையம் பா.ஜ.க.வினர் மாவட்ட பொது செயலர் சரவணராஜன் தலைமையில், கோட்டைமேடு பஸ் நிறுத்தத்தில் தூய்மை பணி மேற்கொண்டனர்.
இதில் கட்சியினர் பஸ் நிறுத்தத்தில் இருந்த பழைய சாமான்கள் அகற்றி, ஒட்டடை அடித்து, தூய்மையாக பெருக்கி, சாணம் போட்டு பூசியும் விட்டனர். இவர்கள் சேவையை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர். இதில் நிர்வாகி ராஜா, சரவணன், சேகர் உள்பட பலர் பங்கேற்றனர். இது போல் ஒவ்வொரு பகுதியும் தூய்மை பணி மேற்கொள்வோம் என பா.ஜ.க.வினர் கூறினர்கள்.
மாவட்ட பொது செயலர் சரவணராஜன் கூறியதாவது: பிரசார சமயத்தில் அனைத்து மகளிருக்கும் மாதம் ஆயிரம் வழங்குவதாக கூறிவிட்டு, இப்போது தகுதி உள்ளவர்களுக்கு மட்டும் என்பது தி.மு.க.அரசின் ஏமாற்று வேலை. மத்திய அரசு திட்டமான வீடு கட்டும் திட்டம் மாநில அரசின் திட்டமாக பொய் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. ஆறுகள் தோறும் தடுப்பணை என்று சொல்லிவிட்டு தற்போது அதற்கான முயற்சியில் ஈடுபடாமல் உள்ளது. கனிமவள கொள்ளை மாநிலம் முழுதும் நடந்து வருகிறது.
அங்கன்வாடி மையங்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. குமாரபாளையத்தில் நன்றாக இருக்கும் பஸ் ஸ்டாண்ட் கட்டிடத்தினை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது அவசியமற்றது. புதிதாக கட்டப்பட்ட மார்க்கெட் கட்டிடம் தரமில்லாமல் கட்டப்பட்டு உள்ளது குறித்து அனைவரும் அறிவார்கள்.கள்ள சாராயம், கஞ்சா, ஒரு நெம்பர் லாட்டரிகளை தடுக்க முடியவில்லை, சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு உள்ளது.
டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், உணவு பொருட்கள் விலை உயர்வை தி.மு.க. அரசு தடுக்க வேண்டும், மின் கட்டண உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம் உயர்வினால் மக்கள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவேண்டும், அரசு மருத்துவ மனைகளில் போதிய டாக்டர்கள், பணியாளர்கள் நியமிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu