குமாரபாளையத்திற்கு நாளை பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை வருகை

குமாரபாளையத்திற்கு நாளை பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை வருகை
X
குமாரபாளையத்திற்கு அக். 27ல் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை குமாரபாளையம் வருகை தரவுள்ளார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்திற்கு நாளை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை குமாரபாளையம் வருகை தரவுள்ளார்.

இது குறித்து மாவட்ட பொதுச் செயலர் சரவணராஜன் கூறுகையில், குமாரபாளையத்திற்கு நாளை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மாலை 06:00 மணியளவில் குமாரபாளையம் வருகை தரவுள்ளார். இடைப்பாடி சாலை, காவேரி பாலம் பிரிவு பகுதியிலிருந்து பாதயாத்திரை தொடங்குகிறார்.

மத்திய அரசின் திட்ட பயன்கள் பெற்ற பயனாளிகளை சந்தித்து உரையாடுகிறார். 200க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் மலர்கள் வழங்கி வரவேற்பு வழங்க உள்ளனர். தலைவருக்கு முன்னால் சிலம்பம் மற்றும் கராத்தே கலைஞர்கள் தங்கள் தனித்திறைமையை காட்டியவாறு வரவுள்ளனர். பேண்டு வாத்திய கலைஞர்கள், தவில், நாதஸ்வர கலைஞர்கள் இசையுடன் பாதயாத்திரை நடைபெறவுள்ளது.

விசைத்தறி கூடத்தில் விசைத்தறி தொழிலாளர்களை சந்தித்து உரையாடவுள்ளார். சேலம் சாலை, ஆனங்கூர் பிரிவு பகுதியில் அமைக்கப்பட்ட அலங்கார மேடையில், பொதுகூட்டத்தில் பங்கேற்று பேசவுள்ளார். அதன்பின் நாமக்கல் செல்கிறார். பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை பெறவுள்ளார். தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, 16 கோடி ரூபாய் செலவில் ஊசி போட்டுக்கொண்டு, ஆரோக்கியமாக வாழ்ந்து வரும் சிறுமியை சந்தித்து பேசவுள்ளார். மத்திய அரசு மூலம் நிதி உதவி, வரி தளர்வு ஆகியவைகளை பெற்றுத்தர உதவிய மாநில தலைவருக்கு சிறுமியின் பெற்றோர் நன்றி தெரிவிக்கவுள்ளனர்.

மாநில தலைவரை வரவேற்க குமாரபாளையம் தொகுதி மற்றும் நாமக்கல் மாவட்டத்தின் பல பகுதியிலிருந்தும் பா.ஜ.க. தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் திரள உள்ளனர். பொதுமக்கள் பெருமளவில் திரண்டு மாநில தலைவர் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளதாக அவர் கூறினார்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு