பா.ஜ.க. மாநில தலைவரை கண்டித்து பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து பத்திரிக்கையாளர்கள் சார்பில் குமாரபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
namakkal news today - பத்திரிக்கையாளர்களை அவமரியாதையாக நடத்திய பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து, குமாரபாளையத்தில் தமிழக நிருபர்கள் சங்க மாநில தலைவர் ராஜசேகர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் பள்ளிபாளைய பிரிவு சாலையில் நடந்தது.
தி.மு.க. நகர செயலர் செல்வம், நகர காங்கிரஸ் கட்சி தலைவர் ஜானகிராமன் ஆர்பாட்டத்தை துவக்கி வைத்தனர். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
namakkal district news
தே.மு.தி.க. மாவட்ட துணை செயலர் மகாலிங்கம், நகர செயலர் நாராயணசாமி, மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் சித்ரா, செல்வராஜ், சி.பி.ஐ. நகர செயலர் கணேஷ்குமார், சி.பி.ஐ.எம்.எல்.,நகர செயலர் சுப்பிரமணி, காங்கிரஸ் நிர்வாகிகள் சிவராஜ், சுப்பிரமணி, சாமிநாதன், தி.மு.க. நிர்வாகிகள் ரவி, அன்பரசு, அன்பழகன், பஞ்சாலை சண்முகம், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu