குமாரபாளையத்தில் பாஜக நகர செயற்குழு கூட்டம்

குமாரபாளையத்தில் பாஜக நகர செயற்குழு கூட்டம்
X

குமாரபாளையத்தில் நடந்த பா.ஜ.க. நகர செயற்குழு கூட்டத்தில் மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் பேசினார்.

குமாரபாளையத்தில் பாஜக நகர செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் பா.ஜ.க. நகர செயற்குழு கூட்டம் மாவட்ட பொதுச் செயலர் வக்கீல் சரவணராஜன், நகர தலைவர் சேகர் தலைமையில் நடந்தது.

சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார், மாவட்ட பார்வையாளர் சிவகாமி பரமசிவம் பங்கேற்று, கட்சி வளர்ச்சி பணிகள், அதிக உறுப்பினர் சேர்க்கை, நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற பாடுபடுதல், பூத் கமிட்டி பணிகள் எடுத்துரைத்தல், வார்டு தோறும் வாரம் ஒருமுறை கூட்டங்கள் நடத்தி, தேர்தல் பணியை முடுக்கி விடுதல் உள்ளிட்டவைகள் குறித்து பேசினார்கள்.

இதில் பாரத பிரதமரின் பத்து ஆண்டு கால சிறப்பான ஆட்சிக்கு வாழ்த்து, காவிரி ஆற்றில் சாயக்கழிவு கலந்து, குடிநீர் மாசுபடுவது குறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு மனு கொடுப்பது, குமாரபாளையம் புதிய தாலுக்கா அலுவலகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என தாசில்தாருக்கு மனு கொடுத்தல் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் வக்கீல் தங்கவேல், துணை தலைவர் கவுதம், நிர்வாகிகள் சரவணன், சுப்பு, மகேஷ், மணிகண்டன், கலைச்செல்வன், சீனி, மூர்த்தி, மகளிரணியினர் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!