விடியல் ஆரம்பம் சார்பில் திருப்பூர் குமரன், சுப்ரமணிய சிவா பிறந்த நாள்

குமாரபாளையம் செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் திருப்பூர் குமரன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
குமாரபாளையத்தில் விடியல் ஆரம்பம் சார்பில் திருப்பூர் குமரன்,சுப்ரமணிய சிவா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
குமாரபாளையம் அருகே வேமன் காட்டு வலசு அரசு உயர்நிலைப் பள்ளியில் விடுதலைப் போராட்ட தியாகிகள் திருப்பூர் குமரன் மற்றும் சுப்பிரமணிய சிவா பிறந்த நாள் விழா அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் நடந்தது.
இருவரின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாணவ, மாணவியர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், வினாடிவினா ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசாக புத்தகங்களை தலைமை ஆசிரியை செல்வி வழங்கினார். ஆசிரியர்கள் குமார், அருள், முத்து,பார்வதி,அம்சா, சந்தான லட்சுமி, கீதாமாதேஸ்வரி, முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.மாணவ மாணவிகள் தாய், தந்தை, ஆசிரியர்கள் சொல்படி நடப்பேன் என்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.
குமாரபாளையத்தில் கொடிகாத்த குமரன் பிறந்தநாள் விழா
குமாரபாளையம் தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் நகரத் தலைவர் தங்கராஜ் தலைமையில் திருப்பூர் குமரனின் 120-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. குமரனின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்தப்பட்டது. மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. டாக்டர் இளங்கோவன், நிர்வாகிகள் சண்முகம், மகேந்திரன், மெய்யழகன் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதில், மாநில நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சீனிவாசன் பேசியதாவது: தமிழகம் முழுவதும் நாட்டின் விடுதலைக்காக அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாக பங்கு கொண்டு கையில் தேசியக் கொடியினை ஏந்தி தொண்டர் படைக்கு தலைமையேற்று அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு கையில் இந்திய தேசியக்கொடியினை ஏந்தியபடி மயங்கி விழுந்து திருப்பூர் குமரன் உயர்நீத்தார். இவ்வாறு அவர் பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu