நலத்திட்ட பணிகளுக்கு பூமி பூஜை முன்னாள் அமைச்சர் பங்கேற்பு

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி குள்ளப்பா நகரில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியினை முன்னாள் அமைச்சர் தங்கமணி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
குமாரபாளையம் அருகே நடைபெற்ற பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கான பூமி பூஜையில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்றார்.
குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சிக்குட்பட்ட அருவங்காடு, மேட்டுக்கடை, வீ.மேட்டூர், வீரப்பம்பாளையம், நல்லாம்பாளையம், கல்லங்காட்டுவலசு, குள்ளப்பா நகர், பெரியார் நகர், குப்பாண்டபாளையம், கோட்டைமேடு உள்ளிட்ட பகுதிகளில், குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி, வடிகால், உறிஞ்சுகுழி, கான்கிரீட் சாலை, பொது கழிப்பிடம் உள்ளிட்ட கட்டுமான பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது. ஊராட்சி தலைவி புஷ்பா தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்று, பூமிபூஜை செய்து, பணிகளை துவக்கி வைத்தார். நிர்வாகிகள் செந்தில், குமரேசன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தட்டான்குட்டை ஊராட்சி தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதிக்கும் ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 17054 ஆகும். இவர்களில் பெண்கள் 8236 பேரும் ஆண்கள் 8818 பேரும் உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu