ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட கட்டுமான பணிகளுக்கு பூமி பூஜை

ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட கட்டுமான பணிகளுக்கு பூமி பூஜை
X

பள்ளிபாளையத்தில் ஆரம்ப சுகாதார நிலையம், கட்டிட கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது. திமுக மேற்கு மாவட்ட செயலாளரும், நகரமைப்பு மண்டல திட்ட குழு உறுப்பினருமான மதுரா செந்தில் கலந்துகொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.

பள்ளிபாளையத்தில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஜீவா செட் பகுதியில் ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில், புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கட்டிட கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.

நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் மதுரா செந்தில் பங்கேற்றார். பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட ஜீவா செட் பகுதியில், 15-வது நிதி குழு சுகாதார மானியம் 2023,2024 சார்பில், பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட வெடியரசம்பாளையம் சாலை ஜீவா செட் பகுதியில், புதிய நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிட கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு நகரமன்ற தலைவர் செல்வராஜ், நகர்மன்ற துணை தலைவர் பாலமுருகன், மற்றும் நகராட்சி ஆணையாளர் தாமரை ஆகியோர் முன்னிலை வகித்தனர் .ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்வை திமுக மேற்கு மாவட்ட செயலாளரும், நகரமைப்பு மண்டல திட்ட குழு உறுப்பினருமான மதுரா செந்தில் கலந்துகொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் திமுக நகர செயலாளர் குமார், வார்டு நகர மன்ற உறுப்பினர்கள், மற்றும் அரசு துறை அதிகாரிகள், பொதுமக்கள் என பெருமளவில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai powered agriculture