குமாரபாளையம் அருகே பல்வேறு பணிகளுக்கான பூமி பூஜை

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை பகுதியில் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் பூமி பூஜை நடந்தது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப்பள்ளி சத்துணவு கூடம் கட்டிடம், ஓலப்பாளையம் பொதுக்கழிப்பிடம், அங்கன்வாடி மையம், பெரியார் நகரில் பொது விநியோக கடை ஆகியவற்றிற்க்கான பூமி பூஜை நேற்று நடந்தது.
இதில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார். ஊராட்சி தலைவி புஷ்பா, ஒன்றிய செயலர் குமரேசன், நிர்வாகிகள் செந்தில், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
குமாரபாளையம் அருகே நீர் தேக்கத்தொட்டிகள் திறப்பு விழா, தார் சாலை பூமி பூஜை விழா நடந்தது.
பல்லக்காபாளையம் ஊராட்சி, கொல்லப்பட்டியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி திறப்பு விழா, விவேகானந்தா சாலை பின்புறம் தார் சாலை, தட்டான்குட்டை ஊராட்சி வீரப்பம்பாளையம் வாய்க்கால் கரை தார் சாலை, உப்புக்குளம் காட்டுவளவு பகுதியில் மேனிலை நீர் தேக்கத்தொட்டி திறப்பு விழா, குப்பாண்டபாளையம் ஊராட்சியில் சானார்பாளையம் தார்சாலை, குள்ளநாயக்கன்பாளையம் தார் சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் பூமி பூஜை, திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்று, நீர் தேக்கத்தொட்டிகளை திறந்து வைத்தும், தார் சாலை பணிகளுக்கு பூமி பூஜை செய்தும் பணிகளை துவக்கி வைத்தார்.
குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் ஊராட்சி, ஒன்றிய தி.மு.க. கவுன்சிலர் தனசேகரன், தி.மு.க. கட்சியில் அதிருப்தியின் காரணமாக அ.தி.மு.க.வில் இணைந்தார். இது குறித்து தனசேகரன் கூறியதாவது:
தி.மு.க. கட்சியில் உரிய மரியாதை இல்லை. ஒன்றிய நிர்வாகிகள் நியமனம் செய்ய போது, தகுதி இல்லாத நபர்களுக்கு பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் நான் அ.தி.மு.க.வில் இணைந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இவருடன் குமாரபாளையம் நகராட்சி பெண் கவுன்சிலர்கள் நந்தினிதேவி, வள்ளியம்மாள், ரேவதி ஆகியோர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu