பவானி, குமாரபாளையம் அம்மன் கோவில் மாசி திருவிழா: 3 தலைமுறைகளில் இல்லாத மாற்றம்

பவானி, குமாரபாளையம் அம்மன் கோவில் மாசி திருவிழா: 3 தலைமுறைகளில் இல்லாத மாற்றம்
X

கோப்பு படம் - காளியம்மன் கோவில். 

பவானி, குமாரபாளையம் பகுதிகளில் நடைபெறும் திருவிழா 3 தலைமுறைகளில் இல்லாத அளவில் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பவானி, குமாரபாளையம் பகுதிகளில் நடைபெறும் திருவிழா 3 தலைமுறைகளில் இல்லாத அளவில் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவில், பவானி அனைத்து சமூக செல்லியாண்டி அம்மன் கோவில் ஆகிய இரு கோவில்களிலும் மாசித் திருவிழா ஒரே தேதிகளில் நடைபெறுவது காலம் காலமான வழக்கம். ஆனால் ஜோதிடர் கூற்றின் படியும், கிரக நிலைகளின் படியும் இந்த ஆண்டு ஒரு வாரம் முன்னும், பின்னுமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. திருமணமாகி சென்றவர்கள், வேலைக்காக வெளியூர் சென்றவர்கள் என பலதரப்பட்ட மக்கள் இந்த பண்டிகை சமயத்தில் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.

பவானி, குமாரபாளையம் இரு ஊர்களுக்கும் வரும் உறவினர்கள் இரு ஊரின் திருவிழாவை கண்டு செல்வர். ஆனால் இந்த ஆண்டு அதற்கு வழியில்லாமல் போனது. குமாரபாளையம் காளியம்மன் திருவிழா பிப். 22 பூச்சாட்டுதல், மார்ச். 1ல் மறு பூச்சாட்டு, மார்ச். 2ல் கொடியேற்றம், மார்ச். 8ல் சக்தி அழைப்பு, மார்ச். 9ல் மகா குண்டம், பூ மிதித்தல், மார்ச். 10ல் அம்மன் திருக்கல்யாணம் மற்றும் தேர்த்திருவிழா, மார்ச். 11ல் தேர்த்திருவிழா மற்றும் வாண வேடிக்கை, மார்ச். 12ல் மஞ்சள் நீர் திருவீதி உலா, மார்ச். 13ல் ஊஞ்சல் விழா ஆகிய திருவிழா நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.

பவானி செல்லியாண்டியம்மன் திருவிழா பிப். 5 பூச்சாட்டு, பிப். 22 கம்பம் நடுதல், பிப். 23 கொடியேற்றம், மார்ச் 1 அம்மனுக்கு புனித நீர் ஊற்றுதல், மார்ச் 2, அம்மை அழைத்தல், பொங்கல் திருவிழா, மார்ச் 3 தேரோட்டம், கம்பம் எடுத்தல், மார்ச் 4 பாரி வேட்டை, மார்ச் 5 தெப்போற்சவம், மார்ச் 6 மஞ்சள் நீர் திருவீதி உலா ஆகிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இது பற்றி பெரியோர்கள் கூறியதாவது:- எங்களுக்கு தெரிந்து 3 தலைமுறைகளாக பவானி, குமாரபாளையம் மாசித் திருவிழா ஒரே சமயத்தில் வருவதுதான் வழக்கம். இந்த ஆண்டுதான் வழக்கத்திற்கு மாறாக ஒரு வாரம் முன்னும், பின்னுமாக அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!