குமாரபாளயத்தில் பாரதியார் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் பாரதியின் பிறந்தநாள்விழா கொண்டாடப்பட்டது.
குமாரபாளையத்தில் பாரதியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
குமாரபாளையம் அருகில் உள்ள வேமன் காட்டு வலசு அரசு உயர்நிலைப்பள்ளியில் மகாகவி பாரதியார் பிறந்த தினவிழா தலைமையாசிரியை செல்வி தலைமையில் கொண்டாடப்பட்டது.
பி.டி.ஏ. தலைவர் காந்தி நாச்சிமுத்து தேசியக்கொடியேற்றி, பாரதியாரின் படத்திற்கு மலர்மாலை அணிவித்து வாழ்த்தி பேசினார். மாணவிகள் பாரதியார் பாடல்களைப் பாடினர். பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசளிக்கப்பட்டது.
ஆசிரியர் மாதேசு பேசியதாவது:பாரதியார் வாழ்ந்தது 39 ஆண்டுகள் என்றாலும், நாட்டிற்கும் மொழிக்கும் சமுதாய முன்னேற்றத்துக்கும் ஆற்றிய பணிகள் ஏராளம். அவருடைய கவிதை களைப் படித்து பயன் பெற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.ஆசிரியர் குமார், ஆசிரியை சந்தானலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த பாரதியார் பிறந்த நாள் விழாவில் முதல்வர் ரேணுகா தலைமை வகித்தார். ரேணுகா பேசியதாவது:சமுதாய ஏற்றத்தாழ்வுகளை கடந்து செயல்பட வேண்டும், பாரதியின் கனவுகளை நனவாக்கிட உழைக்க வேண்டும், பாரதியின் கவிதை வரிகளை மெய்ப் பிக்கும் வகையில் அனைவரும் நடந்திட உறுதியேற்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
விடியல் ஆரம்பம் சார்பில் அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் பாரதி பிறந்த நாள் விழா நடந்தது. அவரது திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாணவ, மாணவியர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu