பிடிஎஸ், எம்டிஎஸ் படிக்கணுமா..? சிறந்த கல்லூரி ஜேகேகேஎன் பல் மருத்துவ கல்லூரி

பிடிஎஸ், எம்டிஎஸ் படிக்கணுமா..? சிறந்த கல்லூரி ஜேகேகேஎன் பல் மருத்துவ கல்லூரி
X

ஆய்வகத்தில் பல் மருத்துவ மாணவிகள்.

பிடிஎஸ் மற்றும் எம்டிஎஸ் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ஒரே சாய்ஸ் குமாரபாளையம் ஜேகேகேஎன் பல் மருத்துவ கல்லூரி.

இந்தியாவில் எம்பிபிஎஸ் (MBBS)மருத்துவ படிப்புக்கு அடுத்தபடியாக முக்கிய படிப்பாக பார்க்கப்படுவது பிடிஎஸ்(BDS). அதாவது பல் டாக்டர். Bachelor of Dental Surgery எனப்படும் இந்த பல் மருத்துவ படிப்புக்கு நல்ல டிமாண்ட் உள்ளது.

நீட் தேர்வு :

எம்பிபிஎஸ் படிப்புக்கு NEET தேர்வில் மார்க் குறைவாக உள்ள மாணவ,மாணவிகள் அடுத்ததாக உடனே தேர்வு செய்வது பிடிஎஸ் படிப்பையே. 5 ஆண்டு படிப்பான இந்த பல் மருத்துவ படிப்புக்கு வேலை வாய்ப்பும் பிரகாசமாகவே உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை எம்பிபிஎஸ் -க்கு அடுத்த படியாக மிகவும் பிரபலமாக இருப்பது பிடிஎஸ் படிப்புதான்.

மதிப்பெண் :

பிடிஎஸ் சேர்வதற்கு, அரசு மருத்துவ கல்லூரிகளை பொறுத்தவரை NEET தேர்வில் 450 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்திருக்க வேண்டும். ஆனால், தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50% மதிப்பெண் இருந்தால் போதுமானதாகும். நல்ல தரமான கல்வி, உட்கட்டமைப்பு வசதி மற்றும் திறன்மிகு பேராசிரியர்கள்,சிறப்பான பயிற்சிகள் உள்ள தனியார் கல்லூரிகளை தேர்வு செய்து சேர்வது நல்லது.

பிடிஎஸ் :BDS

பிடிஎஸ், ஓராண்டு internship உடன் சேர்த்து 5 ஆண்டு படிப்பாகும். 5 ஆண்டு படிப்பை முடித்ததும் பல் மருத்துவ டாக்டராக பணியாற்ற Dental Council of India (DCI) license வழங்கும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் பணி வாய்ப்புகள் உள்ளன. நல்ல ஆங்கில திறமை இருக்குமேயானால் வெளிநாடுகளிலும் பணி வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.

எம்டிஎஸ் :MDS

இதேபோலவே, பிடிஎஸ் முடித்த பின் உயர்கல்வி கற்க விரும்பும் மாணவர்கள் எம்டிஎஸ் MDS(Master of Dental Surgery) மருத்துவ படிப்பில் சேரலாம். PG முடித்த கையோடு Ph.D. பண்ணலாம். இது ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் (Teaching) பணி செய்ய விரும்புபவர்களுக்கு உதவும். இதற்கும் சிறந்த கல்லூரிகளை தேர்வு செய்வது அவசியம்.

சிறந்த கல்லூரி :

நாமக்கல் மாவட்டத்தில் பல் மருத்துவ படிப்பில் சிறந்து விளங்கும் ஒரே கல்லூரி JKKN Dental College மட்டுமே. அது பிடிஎஸ் கோர்ஸாக இருந்தாலும் சரி, எம்டிஎஸ் கோர்ஸாக இருந்தாலும் சரி. ஒரே பதில் JKKN பல் மருத்துவ கல்லூரியே. சிறந்த சூழல், மாணவர்களுக்கு வழிகாட்ட திறமை மிக்க பேராசிரியர்கள், பல் மருத்துவமனை, மருத்துவ நூலகம், ஆய்வக வசதி, அருகில் உள்ள முக்கிய நகரங்களில் இருந்து வருவதற்கு கல்லூரி பேருந்து என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மாணவிகளுக்கு தனி ஹாஸ்டல் வசதியும் செய்யப்பட்டுள்ளது. சுகாதாரமான சூழல் மற்றும் சுவையான உணவும் வழங்கப்படுகிறது.

மார்க்கட் மதிப்பு :

இதய பிரச்னை உள்ளவர், இதயம் பற்றி படித்த டாக்டரிடம் செல்வதையே பாதுகாப்பாக உணர்வார். அதேபோல பல் சம்பந்தமான பிரச்னைகளுக்கு பல் டாக்டரிடம் தான் வருவார்கள். அரசுத் துறையிலும் எம்பிபிஎஸ் -க்கு இணையாகவே பிடிஎஸ் பார்க்கப்படுகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!