ஐயப்ப சேவா சங்கம் சார்பில் நவரத்தின விழா

ஐயப்ப சேவா சங்கம் சார்பில்  நவரத்தின விழா
X

பள்ளிபாளையத்தில் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் நவரத்தின விழா நடந்தது.

பள்ளிபாளையத்தில் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் நவரத்தின விழா நடந்தது

பள்ளிபாளையத்தில் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் நவரத்தின விழா நடந்தது.

பள்ளிபாளையம் ஆவாரங்காடு கிளை அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில், 34ம் ஆண்டு துவக்க விழா மற்றும் நவரத்தின விழா கிளை செயலர் லோகநாதன் தலைமையில் நடந்தது. மத்திய மாநில துணைத் தலைவர் பாலசுப்ரமணியம் சங்க கொடியேற்றி வைத்தார். சுமதி, நிர்மலா குத்துவிளக்கேற்றினர். கிளை தலைவர் சேகர் தொடக்கி வைத்தார்.

மாவட்ட செயலர் ஜெகதீஷ், மாவட்ட தலைவர் பிரபு,முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்று அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை, கள்ளிந்திரி முதியோர் இல்லத்திற்கு இலவச வேட்டி சேலை, சபரிமலையில் சேவை செய்த தொண்டர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள், மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி வாழ்த்தினார்கள். கவுன்சிலர்கள் வேணுகோபால், கவிதா, நிர்வாகி லட்சுமிநாராயணன் உள்பட பலர் பங்கேற்று வாழ்த்தி பேசினார்கள்.

நாமக்கல் மாவட்ட அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் மற்றும் நாராயண நகர் கிளை சார்பில் நவரத்தின விழா மாவட்ட செயலர் மற்றும் மத்திய செயற்குழு உறுப்பினர் ஜெகதீஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்ட கையேட்டினை தேசிய தலைவர் ஐயப்பன் வெளியிட்டார். சபரிமலையில் பக்தர்களுக்கு சேவை செய்திட 32 ஆண்டுகளாக மாணவர்களை அனுப்பி வைத்த கந்தசாமி கண்டர், கே.எஸ்.ஆர். கல்லூரி மாணவர்கள், கல்லூரி நிர்வாகிகளுக்கும், ஐயப்பா சேவா சங்க கிளை நிர்வாகிகளுக்கும் விருதுகள் மற்றும் சான்றிதழ்களை மத்திய மாநில துணை தலைவர் பாலசுப்ரமணியம் வழங்கினார்.

சபரிமலையில் அன்னதானம் வழங்க, மளிகை பொருட்கள், நிதி உதவி வழங்கி உதவியவர்களுக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் பிரபு சான்றிதழ்கள், விருது வழங்கினார். நாமக்கல் மாவட்ட அளவில் 86 ஐயப்ப சேவா கிளை சங்கங்கள் இருந்த நிலையில் புதியதாக 10 சேவா சங்க கிளைகள் நிறுவப்பட்டு, நிர்வாகிகள் நியமனம் செய்து, பட்டயங்களை மாவட்ட பொருளர் செங்கோட்டையன் வழங்கினார்.

தொடர்ந்து கரிமலையில் 60 நாட்கள் சேவை செய்த மாவட்ட கவுரவ தலைவர், வழக்கறிஞர் கார்த்திகேயன் கவுரவிக்கப்பட்டார். திருவண்ணாமலை அருகே செங்கம் பகுதியிலிருந்து சபரிமலை சென்ற பஸ் குமாரபாளையத்தில் விபத்துக்குள்ளான போது, அதில் சிக்கியவர்களை மீட்டு சேவை செய்த குமாரபாளையம் கருமாரியம்மன் கிளை பொறுப்பாளர்களுக்கு மாவட்ட செயலர் ஜெகதீஷ் பாராட்டி விருது வழங்கினார். மேலும் ஆக்சிஜன் சேவை, ஸ்ட்ரெட்சர் சேவை, மருத்துவ உதவிகள் செய்தவர்கள் கவுரவிக்கப்பட்டனர். நிர்வாகிகள் ஸ்ரீதர், நாராயணன் உள்ளிட்ட பலர் வாழ்த்தி பேசினார்கள்.

படவிளக்கம் :

பள்ளிபாளையம் ஆவாரங்காடு கிளை அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் நடந்த நவரத்தின விழாவில் மாணவ, மாணவியர்களுக்கு விருதுகளை முன்னாள் அமைச்சர் தங்கமணி வழங்கினார்.

Tags

Next Story
ai in future agriculture