அரசு கலைக் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரசு கலைக் கல்லூரியில்   விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முதல்வர் ரேணுகா பேசினார்.

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குமாரபாளையத்தில் தகவல் அறியும் உரிமை சட்ட வார கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் ரேணுகா தலைமை வகித்தார்.

மாணாக்கருக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி மற்றும் கவிதை போட்டிகள் நடத்தப்பட்டது. கல்லூரியின் தமிழ் துறை தலைவர் ஞானதீபன் போட்டியின் நடுவராக இருந்து, மாணாக்கர்களை தேர்வு செய்தார். வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டன. பேராசிரியர்கள் கண்ணன், அன்புமணி உள்பட பலர் பங்கேற்றனர்.

குமாரபாளையம் அரசு கலைக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம் முதல்வர் ரேணுகா தலைமையில் நடந்தது. முன்னாள் மாணவ, மாணவியர் தங்கள் ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஒவ்வொருவரும் தாங்கள் படித்த தருணத்தில் நடந்த சம்பவங்கள் குறித்தும், தாங்கள் தற்போது பணியாற்றி வரும் நிறுவனங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டனர். பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.

வசதி இல்லாத மாணவ, மாணவியர்களுக்கு உதவுதல், கல்லூரிக்கு தேவையான அத்தியாவசியமான உபகரணங்கள் வாங்கி தருவது, ஒவ்வொரு ஆண்டும் சங்க கூட்டம் கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்டு, புதிய மாணவ, மாணவியர்களுக்கு அரசு கல்லூரியின் சிறப்பம்சம் குறித்து எடுத்துரைத்தல், அரசு தேர்வுக்கு தேவையான உதவிகளை புதிய மாணவ, மாணவியர் களுக்கு செய்தல் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கணிதத்துறை மற்றும் ஆங்கிலத்துறை பேராசிரியர்கள் வாசுதேவன், பத்மாவதி உள்பட பலர் பங்கேற்றனர்.


Tags

Next Story
ai in future agriculture