குமாரபாளையம் இளைஞருக்கு சர்வதேச யோகா விருது

குமாரபாளையம் இளைஞருக்கு சர்வதேச     யோகா விருது
X

யோகா அர்விந்த் 

சர்வதேச இளைஞர் விருது குமாரபாளையம் இளைஞருக்கு வழங்கப்பட்டது.

குமாரபாளையம் இளைஞருக்கு சர்வதேச இளைஞர் விருது வழங்கப்பட்டது.

நோபில் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் மற்றும் சர்வதேச விருது வழங்கும் மையம் சார்பில் யோகா, விளையாட்டு, கலைத்துறை, இசைத்துறை போன்ற துறைகளை சேர்ந்த சாதனையாளர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்குவது வழக்கம். இந்த ஆண்டிற்கான விருது வழங்கும் விழா, நாமக்கல் மாவட்டம், குமரபாளையத்தில் நடந்தது.

குமாரபாளையத்தை சேர்ந்த யோகா சாதனையாளர் 22வயது அரவிந்த் என்பவருக்கு சர்வதேச இளைஞர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயபிரதாப், வினோத், திருஞானராமன், கவுதமன் ஆகியோருக்கும் இந்த விருது வழங்கப்பட்டது. வஇந்த விருதினை தமிழ்நாடு உடற்கல்வி விளையாட்டு பல்கலைக்கழக துணை வேந்தர் ஷீலா ஸ்டீபன் வழங்கி, இளைஞர் அரவிந்தை பாராட்டினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!