பேருந்துகள் நிறுத்தும் இடத்தில்...! குமாரபாளையத்தில் ஆட்டோ சங்கங்கள் மோதல்..!
படவிளக்கம் : குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் நிற்கும் இடங்களில், ஆட்டோ சங்க பிரச்னை காரணமாக வரிசையாக ஒரு தரப்பு ஆட்டோ சங்க ஆட்டோக்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.
குமாரபாளையத்தில் ஆட்டோக்கள் பஸ்கள் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி வைத்தததால் ஆட்டோ சங்க பிரச்னை விஸ்வரூபமெடுக்கிறது.
குமாரபாளையத்தில் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கற்பக விநாயகர் ஆட்டோ ஸ்டாண்ட், தளபதி ஆட்டோ ஸ்டாண்ட் என இரு ஆட்டோ சங்கங்கள் உள்ளன. கற்பக விநாயகர் ஆட்டோ ஸ்டாண்ட் ஓட்டுனர்கள், ஆட்டோக்களை பஸ் ஸ்டாண்ட் உள் பகுதியில் நிறுத்தி வைத்து, பயணிகளை ஏற்றிக்கொண்டு வருகின்றனர். தளபதி ஆட்டோ ஸ்டாண்ட் ஓட்டுனர்கள் பஸ் ஸ்டாண்ட் பொது கழிப்பிட பகுதி, மற்றும் வெளியில் பயணிகளை ஏற்றிகொண்டு வருகிறார்கள். இதனால் தளபதி ஆட்டோ ஸ்டாண்ட் ஆட்டோக்களுக்கு போதிய வருமானம் இல்லாத நிலை ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து குமாரபாளையம் போலீசில் தளபதி ஆட்டோ ஸ்டாண்ட் ஓட்டுனர்கள் இரு நாட்கள் முன்பு புகார் கொடுத்தனர். நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், தளபதி ஆட்டோ ஸ்டாண்ட் ஓட்டுனர்களுக்கு ஆதரவாக போலீசாரிடம் பேசினார். இன்ஸ்பெக்டர் தவமணி இது குறித்து விசாரணை செய்து நல்லதொரு தீர்வு ஏற்படுத்தி தருவதாக கூறி அனைவரையும் அனுப்பி வைத்தார்.
நேற்று மாலை ஒரு தரப்பினர் பஸ்கள் நிற்கும் இடங்களில் வரிசையாக ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தி வைத்தனர். இது பஸ்கள் நிறுத்த இடையூறாக இருந்தது. ஆட்டோ சங்கத்தினர் பிரச்சனை இதனால் விசுவரூபமெடுத்துள்ளது. இரு சங்கத்திலும் சுமார் தலா 80க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் உள்ளன. நகரின் பல்வேறு பகுதிகளுக்கும், நகர எல்லைக்கு வெளியில் உள்ள வட்டமலை, வளையக்காரனூர், சத்யா நகர், காவேரி நகர், புளியம்பட்டி, வினோபாஜி நகர், சடையம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு போகவும், அங்கிருத்து வரவும் பொதுமக்கள் இந்த ஷேர் ஆட்டோக்களைத்தான் பெரும்பாலும் பயன்படுத்தி வருகிறார்கள். இரு தரப்பு ஆட்டோ சங்கத்தினரை அழைத்து மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக உறவு ஏற்படுத்த வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu