குமாரபாளையம் அருகே சாலையாக மாற்றிய வாய்க்காலை மீட்ட அதிகாரிகள்

குமாரபாளையம் அருகே சாலையாக மாற்றிய வாய்க்காலை மீட்ட அதிகாரிகள்
X

குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் ஊராட்சி, கோட்டைமேடு பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வாய்க்காலை தாசில்தார் தமிழரசி,பொதுப் பணித்துறை உதவி பொறியாளர் சுவாமிநாதன் ஆகியோர் மீட்டனர்.

குமாரபாளையம் அருகே விவசாயிகள் சிலர் தங்கள் வசதிக்காக வாய்க்காலை சாலையாக மாற்றி ஆக்கிரமிப்பு செய்ததை பொதுப்பணித்துறையினர் மீட்டனர்.

குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் விவசாய நிலங்கள் வீட்டுமனை நிலங்களாக அங்கீகாரம் செய்யப்பட்டு விற்பனை செய்யபடுகின்றன. அவ்வாறு மாற்றப்படும் போது, அப்பகுதியில் உள்ள நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகின்றன.

இது குறித்து ஏராளமான புகார்கள் நாமக்கல் மாவட்ட கலெக்டருக்கு வந்ததையடுத்து, கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்திரவின் பேரில், திருச்செங்கோடு ஆர்.டி.ஒ. இளவரசி வழிகாட்டுதலின் பேரில், நீர்வழி ஆக்கிரமிப்பு தொடர்பாக பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் ஊராட்சி, கோட்டைமேடு பகுதியில் உள்ள வாய்க்கால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து தாசில்தார் தமிழரசி தலைமையில் பொதுப் பணித்துறை உதவி பொறியாளர் சுவாமிநாதன் ஆகியோர், ஆக்கிரமிக்கப்பட்ட 11 மீட்டர் அகலமும், 200 மீட்டர் நீளமும் கொண்ட வாய்க்கால் பகுதியை பொக்லின் உதவியுடன் மீட்டனர். சர்வேயர் சங்கீதா, ஆர்.ஐ. விஜய், வி.ஏ.ஓ முருகன் உடனிருந்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்