பாலிஷ் போட கொடுத்த நகைகளை ஆட்டையை போட்ட ஆசாமி: இருவர் கைது, ஒருவர் தலைமறைவு

பாலிஷ் போட கொடுத்த நகைகளை ஆட்டையை போட்ட ஆசாமி: இருவர் கைது, ஒருவர் தலைமறைவு
X
பாலிஷ் போட்டுதருவதாக கூறி 18 1/2 பவுன் மோசடி செய்த வழக்கில் இருவர் கைது. ஒருவர் தலைமறைவு.

பள்ளிபாளையம் கோட்டக்காடு பகுதியில் வசிப்பவர் வளர்மதி, 38. பெருமாள்மலைக்காடு பகுதியில் வசிக்கும் பழனிச்சாமி, 29, வளர்மதியும் குடும்பத்தாருடன் நல்ல நட்பு முறையில் பழகி வந்துள்ளார். பழனிச்சாமி நகை பாலிஷ் போடும் தொழில் செய்பவர் என்பதால் அவரிடம் வளர்மதி தன் தங்க செயின், வளையல், மோதிரம் உள்பட 18 1/2 பவுன் நகையை பாலிஷ் போட ஆக. 14ல் மாலை 04:00 மணிக்கு கொடுத்துள்ளார்.

வளர்மதியின் வீட்டின் முன்பு நகைக்கு பழனிச்சாமி பாலிஷ் போட்டு கொண்டு இருந்தார். அதே நாள் மாலை ௦6:௦௦ மணியளவில் டீ சாப்பிட்டு வருவதாக கூறி சென்றுள்ளார். போனவர் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வரவில்லை. இது பற்றி பழனிச்சாமி வீட்டுக்கு சென்று பழனிசாமியின் அம்மா சித்ரா, பழனிசாமியின் மாமனார் வெங்கடேசன், இருவரிடமும் கேட்க, இருவரும் வளர்மதியை தகாத வார்த்தையால் திட்டியதுடன் அடிக்கவும் முற்பட்டனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த வளர்மதி பள்ளிபாளையம் போலீசில் புகார் செய்தார். நேரில் விசாரனைக்கு சென்ற போலீசார் பழனிச்சாமி, வெங்கடேசன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். சித்ரா தலைமறைவானதால் அவரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி