/* */

பள்ளிபாளையத்தில் அருந்தமிழர் பேரவை நிர்வாகி படுகொலை

பள்ளிபாளையத்தில், அருந்தமிழர் பேரவையில் மாநில நிர்வாகி படுகொலை செய்யப்பட்டார்; பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இக்கொலைக்கு, முன்விரோதம் காரணமாக என போலீசார் விசாரிக்கின்றனர்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் காவிரி ஆர்.எஸ். கரட்டாங்காடு பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் கடந்த 5-வருடங்களாக அருந்தமிழர் பேரவை அமைப்பை ஏற்படுத்தி, நடத்தி வந்துள்ளார்.

நேற்றிரவு வழக்கம் போல வீட்டின் அருகே உள்ள மாரியம்மன் கோவில் திடலில் தனியாக அமர்ந்து கொண்டிருந்த போது சில மர்மநபர்கள் கட்டையால் அவரை தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் முகத்தில் படுகாயமடைந்து சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து, இன்று காலையில் அப்பகுதியினர் ரத்த வெள்ளத்தில் ரவி சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பள்ளிபாளையம் காவல்நிலைய போலீசார் உயிரிழந்த அருந்தமிழர் பேரவை மாநில நிர்வாகி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திற்கு வந்த கைரேகை நிபுணர்கள், தடயங்களை சேகரித்தனர். அப்பகுதி முழுவதும் மோப்பநாய் சீமா உதவியுடன் சோதனை நடத்தினர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் , சம்பவ இடத்தினை நேரில் பார்வையிட்டு குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

முன்விரோத காரணமாக கொலை செய்யபட்டரா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சினையா?என்பது குறித்து எஸ்பி விசாரணை நடத்தினார். அருந்தமிழர் பேரவை மாநில நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 6 July 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  2. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  3. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  4. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  5. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  6. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  8. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  9. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  10. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...