குமாரபாளையம் அரசுப் பள்ளியில் கிரில்கள் அமைத்த மக்கள் நீதி மையத்திற்கு பாராட்டு
குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில் பெண்கள் அரசு பள்ளிக்கு பாதுகாப்பு கிரில்கள் அமைக்கப்பட்டதற்கு நிர்வாகி சித்ராவுக்கு, தலைமையாசிரியை கலைச்செல்வி பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் முதல் தளத்தில் சுற்றுச்சுவர் பகுதியில் வெற்றிடமாக உள்ளதால், அங்கு பாதுகாப்பு கிரில்கள் அமைக்க வேண்டி கோரிக்கை எழுந்தது.
இதனை மக்கள் நீதி மய்யம், வட அமெரிக்கா கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில், பத்மாவதி தலைமையில், 25 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 5 பாதுகாப்பு கிரில்கள் அமைக்கப்பட்டன. இதனால் மாணவிகள் அச்சமின்றி வகுப்பறைக்கு சென்று வரும் நிலை உருவாகியுள்ளது. இதற்குண்டான ஏற்பாட்டினை நாமக்கல் மாவட்ட மக்கள் நீதி மய்யம் மகளிரணி அமைப்பாளர் சித்ரா செய்திருந்தார்.
பாதுகாப்பு கிரில்கள் அமைத்து கொடுத்தமைக்கு பள்ளியின் ஆசிரிய பெருமக்கள், மாணவியர் நன்றி தெரிவித்துக்கொண்டனர். இதற்காக நடந்த பாராட்டு விழாவில் தலைமை ஆசிரியை கலைச்செல்வி, நிர்வாகி சித்ராவுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
சித்ரா பேசியதாவது:
மக்கள் நீதி மய்யம் நிறுவனர் தனது ரசிகர் மன்றங்களை தொடக்க காலம் முதலே சேவை மையங்களாக, நற்பணி மன்றங்களாக வைத்திருந்தார். அரசியலுக்கு முன்பே சேவை மனப்பான்மை கொண்டவர். அவர் வழியில் நாங்கள் செல்லும் போது, எங்களால் ஆன உதவிகளை செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu